யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் சம்பாதித்து வருபவர் TTF வாசன். சமீபகாலமாக இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த ஆண்டு பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்து உடன் பைக்கில் வேகமாக சென்றதன் காரணமாக TTF வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோர்ட்டுக்கு சென்று இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வாங்கினார் வாசன்.
இதையடுத்து கடலூரில் ஒரு ஆபிஸ் திறப்பு விழாவுக்கு சென்றபோது, இவரது பாலோவர்கள் அங்கு அதிகளவில் திரண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி துரத்தி அனுப்பினர். பின்னர் TTF வாசன் மீதும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து யார் நம்மை துரத்தினார்களோ, அவர்களே ராஜமரியாதையோடு நமக்கு வரவேற்பு அளிப்பார்கள். அளிக்க வைப்போம் என போலீசுக்கு சவால்விடும் வகையில் வீடியோவில் வீர வசனமெல்லாம் பேசி இருந்தார் TTF வாசன்.
இதையும் படியுங்கள்... வாரிசு இசை வெளியீட்டு விழாவை வேண்டுமென்றே புறக்கணித்தாரா சங்கீதா?... விஜய்யின் மனைவி ஆப்சென்ட் ஆனது ஏன்?
இந்நிலையில், தற்போது காலேஜ் ரோடு என்கிற படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க சென்னையில் உள்ள கமலா தியேட்டருக்கு வந்திருந்தார் TTF வாசன், அப்போது அவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததை பார்த்த போலீசார், தியேட்டருக்கு வந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து, அவர் வந்த காரை பறிமுதல் செய்தனர்.
பின்னர் விஷயம் அறிந்து வந்த TTF வாசன், இது தனது கார் இல்லை, தனது நண்பனின் கார் என்று கூறியுள்ளார். அவர்சொன்ன காரணங்கள் போதுமானதாக இல்லாததால் காரை பறிமுதல் செய்த போலீசார், ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். இதை அறிந்த நெட்டிசன்கள், இது தான் ராஜ மரியாதையா என ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘கொன்றால் பாவம்’