அடக்கடவுளே...வாயில் பாய்ந்த தோட்டா..ஆபத்தான நிலையில் ஜெமினி கணேசன்... அவரே சொன்ன உண்மை என்ன தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Jan 04, 2022, 02:55 PM ISTUpdated : Jan 04, 2022, 02:57 PM IST

ஜெமினி கணேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது. போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலம் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
19
அடக்கடவுளே...வாயில் பாய்ந்த தோட்டா..ஆபத்தான நிலையில் ஜெமினி கணேசன்... அவரே சொன்ன உண்மை என்ன தெரியுமா?
gemini ganesan shootout

‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர்.

29
gemini ganesan shootout

எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்

39
gemini ganesan shootout

அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்.

49
gemini ganesan shootout

‘மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகப் போற்றப்பட்டது.

59
gemini ganesan shootout

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

69
gemini ganesan shootout

திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார்.

79
gemini ganesan shootout

 காதல் மன்னன் என்ற  பெயருக்கு தகுந்தாற்போல் இவருக்கு நான்கு மனைவிகள்.மருத்துவராக வேண்டும் என கனவுகளோடு வாழ்ந்த இவர், தந்தையின் இறப்புக்குப் பின்னர் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியவர்.

89
gemini ganesan shootout

பின்னர் சினிமா துறையில் கோடி கட்டி பறந்த ஜெமினி கணேசன் ஒருமுறை வாயில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தில் இருந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

99
gemini ganesan shootout

இது குறித்து ஜெமினிகணேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் எனது மகனுடன் சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருக்கும்போது, துப்பாக்கியை எடுத்து சுத்தம் செய்தேன், அது தவறுதலாக மூன்று முறை சுட்டு விட்டது என்றும் அதில் ஒரு துப்பாக்கி குண்டு தன் வாயில் பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த தவறு முந்தைய நாள் தான் அதிக அளவில் மது அருந்தியதாகவும். அந்த மயக்கத்தில் ஏற்பட்ட விளைவுதான் இது, என்றும் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories