தமிழ் சினிமாவுக்கு 2022-ம் ஆண்டு பல்வேறு பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்கள் கிடைத்தன. இதனால் கோலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டின் கடைசி வாரம் இது என்பதால், இந்த வார இறுதியில் திரையரங்கில் 8 படங்களும், ஓடிடி-யில் 5 தமிழ் படங்களும் ரிலீசாக உள்ளன. அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தியேட்டரில் ரிலீசாகும் படங்கள்
தமிழ் சினிமாவில் வருகிற டிசம்பர் 30-ந் தேதி திரிஷாவின் ராங்கி, சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட், ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா மற்றும் கோவை சரளா நடித்துள்ள செம்பி என கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட 4 படங்கள் ரிலீசாக உள்ளன. இதுதவிர காலேஞ் ரோடு, அருவா சண்ட, சகுந்தலாவின் காதலன், கடைசி காதல் கதை ஆகிய நான்கு சிறு பட்ஜெட் படங்களும் திரைக்கு வர உள்ளன.
இதையும் படியுங்கள்... வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த டார்கெட் சிவகார்த்திகேயன்... அவர் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன தில் ராஜு..!
ஓடிடியில் ரிலீசாகும் படங்கள்
ஓடிடி-யை பொறுத்தவரை இந்த வாரம் 5 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளன. அதில் நான்கு படங்கள் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய வெளியீடாகவும், ஒரே ஒரு படம் மட்டும் நேரடி ஓடிடி வெளியீடாகவும் ரிலீசாக உள்ளன. அதன்படி நயன்தாராவின் கோல்டு, விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, அதர்வாவின் பட்டத்து அரசன் ஆகிய நான்கு படங்களும் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய வெளியீடுகள். இதில் கட்டா குஸ்தி ஜனவரி 1-ந் தேதியும், கோல்டு டிசம்பர் 29-ந் தேதியும் மற்ற படங்கள் வருகிற டிசம்பர் 30-ந் தேதியும் ரிலீசாக உள்ளன.