பர்த்டே ஸ்பெசலாமா வெளியான த்ரிஷாவின் சொத்து மதிப்பு..நயன்தாரா, சமந்தாவை விட இவ்ளோ கம்மியா?

Kanmani P   | Asianet News
Published : May 06, 2022, 06:31 PM IST

முன்னணி நாயகியாக 22 ஆண்டுகளுக்கு மேலாக கொடி நாட்டி வரும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

PREV
18
பர்த்டே ஸ்பெசலாமா வெளியான த்ரிஷாவின் சொத்து மதிப்பு..நயன்தாரா, சமந்தாவை விட இவ்ளோ கம்மியா?
Trisha

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தேர்தெடுத்து வரும் த்ரிஷா கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

28
trisha

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்துடன் சினிமா துறைக்குள் நுழைந்த த்ரிஷா ஜோடி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

38
trisha

 பின்னர் லேசா லேசா இவருக்கு நாயகி அந்தஸ்தை கொடுத்தது. இதையடுத்து வெளியான எனக்கு 20 உனக்கு 18 படம் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை பெற்றுக் கொடுத்து விட்டது.

48
trisha

பின்னர் சூர்யாவுடன் மௌனம் பேசியதே படம் இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையை கொடுத்தது. அதோடு விக்ரமுடன் சாமியில் மிளகாய்பொடி மாமியாக தோன்றி இளசுகளை கவர்ந்தார். 

58
trisha

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா இவருக்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்து விட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த த்ரிஷா வருஷம் படம் மூலம் நாயகியானார்.

68
trisha

தமிழில் முன்னணி நாயகர்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்த திரிஷா உனக்கும் எனக்கும் படத்தில் கிராமத்து பெண்ணாக இளைஞர்கள் மிகவும் கவர்ந்து இருந்தார்.

78
trisha

தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய திரிஷா, தற்போது தி ரோட் படத்திலும், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

88
trisha

இந்நிலையில் த்ரிஷாவின் சொத்தது மதிப்பு வெளியாகியுள்ளது. மொத்த சொத்து மதிப்பு 75 முதல் 80 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது நயன்தாரா, சமந்தா சொத்து மதிப்பை விட குறைவாகும்.சமந்தாவிடம் 84 கோடி வரை சொத்துக்கள் உள்ளதாகவும், நயன்தாராவின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேல் உள்ளதாக தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories