தமிழகத்தில் ரூ 100 கோடி வசூலித்த முதல் டப்பிங் படம்.. பெருமையை கைப்பற்றிய யாஷ்

Published : May 06, 2022, 03:30 PM IST

தமிழகத்தில் ரூ 100 கோடி வசூலித்த முதல் டப்பிங் தமிழ் படம் என்ற பெருமையை யாஷ் நடித்த கேஜிஎஃப்: அத்தியாயம் 2' பெற்றுள்ளது.

PREV
18
தமிழகத்தில் ரூ 100 கோடி வசூலித்த முதல் டப்பிங் படம்.. பெருமையை கைப்பற்றிய யாஷ்
kgf 2

சமீபத்தில் பான் இந்தியா பாடமாக உருவாகி உலகம் முழுவதும் மாஸ் காட்டிய கே.ஜி.எஃப் 2. யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன.

28
kgf 2

அசல் கன்னட படத்தின் தொடர்ச்சியாக பல டப்பிங் பதிப்புகளுடன் ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. அதோடு விஜயின் அதிரடி நாடகமான விஜய்யின் ' பீஸ்ட் ' உடன் மோதியது.

38
kgf 2

 இப்படம் உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது. தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது.

48
kgf 2

இப்படத்தின் 320 கோடி ரூபாய் கொடுத்து ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.இது படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாம்.

58
kgf 2

திரையரங்கை தொடர்ந்து இப்படம் வருகிற மே 27-ந் தேதி ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

68
kgf 2

கடந்த மாதம் வெளியான இந்த படம் திரையரங்குகளில் மூன்று வாரங்களுக்கு மேல் ஓடி கொண்டிருகிறது.  பெரும்பாலான இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக இருக்கிறது. 

78
kgf 2

 இப்படம் இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

88
kgf2

தமிழகத்தில் ரூ 100 கோடிக்கு மேல் வசூல்செய்து கே.ஜி.எஃப்2 சாதனை படைத்துள்ளது. அதோடு  அதிக வசூல் செய்த முதல் டப்பிங் தமிழ் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories