ரகசிய சிநேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவால் வெடித்த சர்ச்சை

Published : Feb 28, 2026, 03:02 PM IST

விஜய் சங்கீதாவின் விவாகரத்து தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகை திரிஷாவின் காதல் பற்றிய பதிவு இணையத்தில் மீண்டும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

PREV
14
Trisha old post sparks Again

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. கோலிவுட்டில் இவருக்கு ஏற்ற ஜோடி என்றால் அது விஜய் தான். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி திரையில் ஒர்க் அவுட் ஆனதால் கடந்த 20 ஆண்டுகளில் 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதில் கில்லி, திருப்பாச்சி, லியோ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களும் அடங்கும். இவர்கள் நடித்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ, அதே அளவுக்கு அவர்கள் இருவரும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும் திரிஷாவும் தனியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தின.

24
சர்ச்சையில் சிக்கிய திரிஷா

அது மட்டுமின்றி நடிகர் விஜய் மாஸ்டர் பட ஆடியோ லான்ச்சுக்கு பின்னர் அவரது மனைவி சங்கீதாவை எந்த ஒரு விழாவுக்கும் அழைத்து வரவில்லை. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர்களின் பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணம் என்கிற பேச்சும் சமூக வலைதளங்களில் பரவலாக அடிபட்டது. ஆனால் அதற்கெல்லாம் விஜயோ அல்லது திரிஷாவோ எதிர்வினையாற்றவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் மற்றும் திரிஷாவின் பெயர் இணைத்துப் பேசப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கு தான்.

34
சங்கீதாவின் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள சங்கீதா, அதில் நடிகர் விஜய்க்கும் நடிகை ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அதைத்தான் பலமுறை கண்டித்தும், அது தொடர்வதாகவும் அதனால் தனக்கு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நடிகை திரிஷா போட்ட பழைய பதிவுகளை நெட்டிசன்கள் தோண்டி எடுத்து, அதை மீண்டும் வைராக்கி வருகின்றனர். அதில் கடந்த ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி நடிகை திரிஷா காதல் குறித்த கேப்சனோடு போட்டுள்ள பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

44
வைரலாகும் திரிஷா பதிவு

அந்தப் பதிவில் காதல் என்றுமே வெல்லும் என குறிப்பிட்டுள்ள திரிஷா, பட்டு சேலை அணிந்து தலையில் மல்லி பூ வைப்பது போன்ற புகைப்படத்தையும் அதில் போஸ்ட் செய்திருந்தார். அந்த சமயத்தில் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தமா என பலரும் கேள்வி அனுப்பி வந்தனர். அந்தப் பதிவில் பின்னணியில் அலைபாயுதே படத்தில் இடம்பெறும் ரகசிய சிநேகிதனே பாடலை ஒலிக்க விட்டிருந்தார் திரிஷா. தற்போது அந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், "ஓஹோ ரகசிய சிநேகிதனா... இப்பதான் புரியுது" என தற்போதைய சூழலோடு ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். இது தவிர விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி திரிஷா போட்ட பதிவுகளும் மீண்டும் காட்டுத் தீ போல் பரவி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories