ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் வரிசையில் விஜய்... கோலிவுட்டை அதிர வைத்த விவாகரத்துகள் ஒரு பார்வை

Published : Feb 28, 2026, 01:24 PM IST

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது தொடர்கதை ஆகி வருகிறது. இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் விஜய். அண்மையில் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

PREV
16
Tamil Cinema Celebrities Divorce

கோலிவுட்டில் விவாகரத்து செய்யும் பிரியும் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஜய். அவருடைய மனைவி சங்கீதா, தனக்கு விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறி உறவு இருந்ததாகவும், அதை பலமுறை கண்டித்தும் தொடர்ந்து வருவதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெறும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார். விஜய்க்கு முன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிரபலங்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.

26
ஏ.ஆர்.ரகுமான் - சைரா பானு

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தார். அவர் கடந்த 1995-ம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 பிள்ளைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் 2024-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர்.

36
ஜிவி பிரகாஷ் - சைந்தவி

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் அண்மையில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். இவர் பாடகி சைந்தவியை கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அன்வி என்கிற பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

46
ரவி மோகன் - ஆர்த்தி

நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் ஆர்த்தி ரவி விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. விவாகரத்து பெறும் முன்னரே பாடகி கெனிஷா உடன் லிவ் டுகெதராக வாழ்ந்து வருகிறார் ரவி மோகன்.

56
தனுஷ் - ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் தன் காதல் மனைவி ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்களும் இருக்கிறார்கள். திருமணமாகி 18 ஆண்டுகளில் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2024-ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது.

66
சமந்தா - நாக சைதன்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நாக சைதன்யா, சோபிதாவை திருமணம் செய்துகொண்டார். அதேபோல் சமந்தாவின் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories