தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியான திருஷா. தற்போது பொன்னியின் செல்வனில் மாஸ் காட்டி இருந்தார். சோழ வம்ச இளவரசி குந்தவை தேவியாக வந்து மிக முக்கிய திருப்புமுனைகளுக்கு காரணமாக அமையும் ரோலில் த்ரிஷா நடித்துள்ளார்.
அதன்படி பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் காமெடி ரோலில் தோன்றியிருந்தார் திரிஷா. இதை அடுத்து மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமாநார்.
இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது. விஜயுடன் இவர் நடித்து பிளாக்பஸ்டர் படங்கள் அனைத்திலும் இவர்களது ஜோடி வெகுவாகவே பாராட்டப்பட்டது அதோடு கிசுகிசுவும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
trisha
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் இவர் மிகப் பிரபலம். மலையாளத்திலும் சில படங்களில் தோன்றியுள்ளார். பேட்ட படத்தை அடுத்து இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
trisha
இறுதியாக பரமபத விளையாட்டு என்னும் படத்தில் நடித்திருந்தார் திரிஷா. தற்போது பொன்னியின் செல்வனின் குந்தவையாக தமிழுக்கு திரும்பி உள்ளார். அதோடு சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் பாகம் 2 ,தி ரோடு உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
trisha
அதோடு மலையாள படம் ஒன்றையும் தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவரது அழகிய புகைப்படமும் தற்போது வைரலாக வருகிறது. பச்சைக்கல் பதித்த மாலையுடன், சல்வார் அணிந்து இவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது.