Trisha : 10 வருட காதல்... பாதியில் நின்ற கல்யாணம்; சர்ச்சை ராணி திரிஷா-வின் கதை

Published : May 14, 2026, 12:02 PM IST

Trisha Relationships : நடிகர் ராணா டகுபதியுடனான பத்து வருட உறவு, ஒரு தொழிலதிபருடன் நின்றுபோன திருமணம் என திரிஷாவின் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அவரது ரிலேஷன்ஷிப்களின் பின்னணியை பார்க்கலாம்.

PREV
14
Trisha Relationships

தளபதி ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சார் ஆக பதவி ஏற்று, அரசியலில் வரலாறு படைத்திருக்கிறார். இந்த நிலையில், விஜய்யுடன் அதிகம் பேசப்படுபவர் அவரது தோழி திரிஷா கிருஷ்ணன் தான். விஜய்யின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கும் திரிஷா தான் காரணம் என பேச்சு அடிபடுகிறது. விஜய்யின் வாழ்க்கையில், திரிஷாவின் ரீ-என்ட்ரி பலரையும் கவனிக்க வைத்தது. இருவரும் தங்கள் உறவை வெளிப்படையாகக் காட்டும் விதத்தில் நடந்துகொள்வதாகப் பேசப்படுகிறது.

24
ராணா உடன் 10 வருட ரிலேஷன்ஷிப்

சினிமா பிரபலங்களின் பெயர்கள் மற்றவர்களுடன் இணைத்துப் பேசப்படுவது சகஜம். ஆனால் திரிஷாவின் கதை கொஞ்சம் வேறு. அவர், பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் சுமார் பத்து வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ராணாவுடனான உறவை திரிஷா வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். அது நட்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு சென்றிருந்தது. இருவரும் பல நாடுகளுக்கு ஜோடியாக பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு அப்போது ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என கோலிவுட்டில் செய்திகள் பரவின.

34
திரிஷா உடன் பிரேக் அப் ஏன்?

ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, இந்த ஜோடி பிரிந்துவிட்டது. உறவு முறிந்த பிறகும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று இருவரும் கூறினர். 'காஃபி வித் கரண்' சீசன் 6 நிகழ்ச்சியில் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் பிரபாஸுடன் ராணா கலந்துகொண்டார். அப்போது திரிஷாவுடனான உறவு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "அவள் பத்து வருஷமா என் ஃப்ரெண்ட். நாங்க ரொம்ப நாள் நண்பர்களா இருந்து, டேட்டிங்கும் பண்ணோம். ஆனா இப்போ அது வொர்க் அவுட் ஆகல" என்று ராணா கூறியிருந்தார்.

44
பாதியில் நின்ற திரிஷா திருமணம்

ராணாவுடனான பிரேக்கப்பிற்குப் பிறகு, வருண் மணியன் என்கிற தொழிலதிபருடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அந்த நிச்சயதார்த்தமும் முறிந்துபோனது. உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் திரிஷா, "நான் தொடர்ந்து நடிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் உறவை முறித்துக்கொண்டேன்" என்று விளக்கம் அளித்தார். நிச்சயதார்த்தத்திற்கு முன்பே இதையெல்லாம் பேசி முடிக்கவில்லையா என அவரது ரசிகர்கள் இன்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories