
தமிழ் சினிமா கடந்த 2 ஆண்டுகளாக பேரிழப்பை சந்தித்தது. இதற்கு காரணம் கொரோனா தான். இந்த பெருந்தொற்றின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது சினிமா தொழில் தான். ஏனெனில் பெருந்தொற்று காலகட்டத்தில் திரையரங்குகள் சுமார் 7 மாதங்கள் வரை மூடப்பட்டன. இதன் காரணமாக படங்களின் ரிலீசும் முடங்கிப்போயின.
கடந்த ஆண்டும் இதே நிலை தான் நீடித்தது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து தான் திரையுலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கின. முடங்கிக் கிடந்த படங்களும் ஒவ்வொன்றாக ரிலீசாக தொடங்கின. இதன்காரணமாக 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம், அஜித்தின் வலிமை என ஏராளமான பெரிய படங்கள் வரிசை கட்டின.
ஆனால் அந்த சமயத்தில் ஓமிக்ரான் தொற்று அதிகளவில் பரவியதால், அப்படங்களெல்லாம் தள்ளிவைக்கப்பட்டன. இதனால் 2022-ம் ஆண்டும் சொதப்பிவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால் ஒரு சில வாரங்களில் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது தமிழ் திரையுலகம்.
கொரோனாவால் மக்கள் வரவு இன்றி துவண்டு போய் கிடந்த தியேட்டர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக அமைந்த படம் அஜித்தின் வலிமை. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கினாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இருந்தாலும் இப்படம் குறைந்த அளவே லாபம் அடைந்தது.
இதையடுத்து மார்ச் மாதம் வரிசையாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு மட்டுமே வெற்றிக்கனி கிட்டியது. மற்ற இரண்டு படங்களில் ராதே ஷ்யாம் படு தோல்வி அடைந்தது. அதேபோல் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் நஷ்டம் இன்றி தப்பித்தது.
இதையும் படியுங்கள்... Rolex ரேஞ்சுக்கு சூர்யாவுக்கு ஒரு ரோல்... ராக்கெட்ரி மூலம் மாதவன் சாதித்தாரா? சோதித்தாரா? - முழு விமர்சனம் இதோ
ஏப்ரல் மாதம் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியானது. இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்து நஷ்டம் ஏற்படாமல் தப்பித்தது. இதற்கு போட்டியாக வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூல் வேட்டை ஆடியது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏப்ரல் மாத இறுதியில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் பாக்ஸ் ஆபிஸில் லாபம் ஈட்டியது.
இதையும் படியுங்கள்... பஞ்சதந்திரம் 2-வில் அஜித்... பிரபலத்தின் கருத்துக்கு குவியும் லைக்ஸ் - ஓகே சொல்வாரா ஏகே?
மே மாதமும் தமிழ் சினிமாவுக்கு சக்சஸ்புல்லாக அமைந்தது. இந்த மாதம் வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதேபோல் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படமும் நல்ல வசூல் செய்தது.
இதையும் படியுங்கள்... 42 வயதிலும் குறையாத கவர்ச்சி... பிகினி உடையணிந்து கடலில் மிதக்கும் வாளமீனு மாளவிகா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
ஜூன் மாதம் கோலிவுட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. ஏனெனில் இந்த மாதம் தொடக்கத்திலேயே கமலின் விக்ரம் திரைப்படம் ரிலீசானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்ததால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம் படம் ரிலீசானது. இப்படம் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வசூலித்து இருந்தது.
இப்படி இந்த ஆண்டு முதல் பாதியில் ஏராளமான பெரிய படங்கள் ரிலீசானாலும் அதில் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என்றால் அது கமலின் விக்ரம், யாஷ் நடித்த கே.ஜி.எஃப், ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர், சிவகார்த்திகேயன் நடித்த டான், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம், விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்கள் தான்.