2025-ல் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 6 நடிகைகள் யார்... யார் தெரியுமா?

Published : Mar 11, 2025, 11:58 AM IST

2025-ம் ஆண்டு நடிகைகளுக்கு ஒரு ஜாக்பாட் ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அவர்களின் சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்.

PREV
17
2025-ல் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 6 நடிகைகள் யார்... யார் தெரியுமா?

Top 6 Highest Paid Actress in Kollywood : 2024-ம் ஆண்டு நயன்தாரா, திரிஷா ஆகியோர் சம்பள விஷயத்தில் முன்னணியில் இருந்தாலும் 2025-ம் ஆண்டு அவர்களை சாய் பல்லவி, ராஷ்மிகா ஆகியோர் ஓவர்டேக் செய்துள்ளார். இந்த ஆண்டு நடிகைகளின் சம்பளம் மளமளவென உயர்ந்துள்ளதோடு, அவர்களின் சொத்து மதிப்பும் எகிறி உள்ளது. இந்த நிலையில், 2025 நிலவரப்படி அதிக சம்பளம் வாங்கும் டாப் 6 தமிழ் நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

27
6. பூஜா ஹெக்டே (Pooja Hegde)

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் பூஜா ஹெக்டே 6-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.7 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். தமிழில் தற்போது செம பிசியான நாயகி என்றால் அது பூஜா ஹெக்டே தான். இவர் கைவசம் கோலிவுட்டில் விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யாவின் ரெட்ரோ மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 ஆகிய படங்கள் உள்ளன.

37
5. சமந்தா (Samantha)

நடிகை சமந்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் படங்கள் இல்லாவிட்டாலும் அவருக்கான மவுசு குறையவில்லை. தற்போது பாலிவுட்டில் தான் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. இதுதவிர தெலுங்கில் பங்காரம் என்கிற படத்தை தயாரித்து அதிலும் நாயகியாக நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடெல் என்கிற வெப் தொடர் வந்தது. அதற்காக ரூ.10 கோடி சம்பளமாக வாங்கினார் சமந்தா.

47
4. திரிஷா (Trisha)

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் கடந்த ஆண்டு நம்பர் 1 இடத்தில் இருந்த திரிஷா, இந்த ஆண்டு நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இவர் கைவசம் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி, மணிரத்னம் இயக்கிய தக் லைஃப், சிரஞ்சீவியின் விஸ்வம்பரா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 ஆகிய படங்கள் உள்ளன. இதில் விஸ்வம்பரா படத்திற்காக ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் திரிஷா.

இதையும் படியுங்கள்... 600 கோடியில் உருவான கமல் படம் உள்பட அதிக செலவில் எடுக்கப்பட்ட டாப் 30 இந்திய படங்கள் லிஸ்ட் இதோ

57
3. ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna)

நடிகை ராஷ்மிகாவின் மார்க்கெட் புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பின் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இதையடுத்து அண்மையில் அவர் நடித்த சரித்திர கதையம்சம் கொண்ட படமான சாவா பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அப்படத்திற்காக ரூ.13 கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.

67
2. நயன்தாரா (Nayanthara)

நடிகை நயன்தாராவிற்கு வயது 40ஐ எட்டிவிட்டாலும் அவருக்கான மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அவர் நடிப்பில் தற்போது டெஸ்ட், டாக்ஸிக், டியர் ஸ்டூடண்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சுந்தர் சி இயக்கத்தில் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம் நயன்தாரா.

77
1. சாய் பல்லவி (Sai Pallavi)

2024-ம் ஆண்டு வரை ஒரு படத்துக்கு ரூ.5 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி வந்தார் சாய் பல்லவி. அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற சாய் பல்லவி அங்கு இராமாயணம் படத்தில் சீதாவாக நடிக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு ரூ.18 முதல் 20 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். இவர் தான் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.

இதையும் படியுங்கள்... அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் இவர்தான்; நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் இந்த நடிகை யார்?

Read more Photos on
click me!

Recommended Stories