தொகுப்பாளராக இருந்து நடிகராக இளசுகள் முதல் பெரியவர்கள் வரை தன வசம் ஈர்த்துள்ளவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது எஸ்.கே 20 மற்றும் அயலான் என இரு படங்களில் பிஸியாக உள்ளார். இவரது சமீபத்திய வெளியீடான டான் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவான டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.