விக்ரம் நேற்று வெளியாகி தமிழ் நாட்டில் மட்டும் 25 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. விரைவில் உலகம் முழுவதும் 100 கோடியை கைப்பற்றும் என தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில் நரேன், காளிதாஸ் ஜெயராமன், சூர்யா, விஜய் சேதுபதி, காயத்ரி, சிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.. மாஸ்டர், கைதி, மாநகரம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்த ஹிட்டாக இந்த படம் வெளியாகியுள்ளது.