
சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவின் காரணமாக வாரத்தில் 7 நாட்களும் சீரியல்களை போட்டிபோட்டு ஒளிபரப்பி வருகிறார்கள். சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான் மக்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள். இதன் காரணமாக தான் வார வாரம் வெளியிடப்படும் டிஆர்பி பட்டியலில் இந்த மூன்று தொலைக்காட்சிகளை சேர்ந்த சீரியல்கள் தான் ஆக்கிரமித்துவிடுகின்றன. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 25வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்.
வழக்கமாக சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் தான் முதலிடத்தை பிடித்திருக்கும். ஆனால் கடந்த சில வாரங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல்களின் மகா சங்கமம் முதலிடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ள அந்த சீரியல்களுக்கு 10.07 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரம் இந்த மகா சங்கமத்திற்கு 9.80 புள்ளிகள் மட்டுமே கிடைத்திருந்தது.
தர்ஷக் கெளடா, மனிஷா மகேஷ் நடிப்பில் சன் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிங்கப்பெண்ணே. தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கடந்த வாரம் 9.63 புள்ளிகளை பெற்றிருந்த சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.98 புள்ளிகளை பெற்று ஜஸ்ட் மிஸ்ஸில் முதலிடத்தை நழுவ விட்டு உள்ளது.
சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வரும் சீரியல் தான் கயல். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த சீரியல் கடந்த வாரம் 9.27 டிஆர்பி புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் அதே இடத்தில் நீடித்தாலும் 9.59 டிஆர்பி புள்ளிகளை பெற்று மாஸ் காட்டி இருக்கிறது.
வெற்றி வசந்த், கோமதிப் பிரியா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை குமரன் இயக்குகிறார். பிரைம் டைம் சீரியலான இது கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 7.87 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 8.05 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பேமஸ் ஆன மதுமிதா விஜய் டிவியில் ஹீரோயினாக நடித்து வரும் தொடர் தான் அய்யனார் துணை. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 7.62 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரமும் அதே இடத்தில் நீடித்தாலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் கூடுதலாக டிஆர்பி (7.78 புள்ளிகள்) பெற்றுள்ளது.
அபி நக்ஷத்ரா மற்றும் பரத் குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் தொடர் தான் அன்னம். இந்த சீரியலில் திவ்யா கணேஷ், மகாநதி ஷங்கர், மனோகர், ராஜலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓராண்டுக்கு மேல் வெற்றிநடை போட்டு வரும் அன்னம் சீரியல் கடந்த வாரம் 7.49 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.72 புள்ளிகளுடன் 6ம் இடத்தை பிடித்திருக்கிறது.
திருச்செல்வம் இயக்கி நடிக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் 2. இந்த சீரியலில் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், அதன் இரண்டாம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரத்தைவிட டிஆர்பியில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது இந்த சீரியல். கடந்த வாரம் 7.50 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் 2 சீரியல் இந்த வாரம் 7.56 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.
ஸ்டாலின் மற்றும் நிரோஷா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியல் கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 8ம் இடத்தில் தான் நீடிக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு கடந்த வாரம் 6.87 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருந்தது. ஆனால் இந்த வாரம் அதைவிட கம்மியாக... அதாவது 6.58 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
புராண கதையம்சம் கொண்ட சீரியல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் மவுசு இருக்கும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் என்கிற டப்பிங் தொடர் மளமளவென டிஆர்பி ரேஸில் முன்னேறி வருகிறது. கடந்த வாரம் வரை டாப் 10 பட்டியலிலேயே இடம்பெறாத இந்த சீரியல் இந்த வாரம் 9ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த வாரம் 6.01 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் இருந்த ராமாயணம் சீரியல் இந்த வாரம் 6.24 புள்ளிகளுடன் 9ம் இடத்தை பிடித்துள்ளது.
நவீன் குமார் மற்றும் ஸ்வேதா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் சீரியல் தான் சின்ன மருமகள். இந்த சீரியல் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வரும் இந்த சீரியல், கடந்த வாரம் 9ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் ராமாயணம் சீரியல் அந்த இடத்தை பிடித்ததால் சின்ன மருமகள் சீரியல் 10ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 6.72 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியல் இந்த வாரம் 6.20 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.