2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்தியப் படங்கள் - லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் படமும் இருக்கு..!

Published : Dec 06, 2025, 11:03 AM IST

2025ல் இந்தியத் திரையுலகில் பல படங்கள் வெளியாகின. அவற்றில் சில, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தவை. அந்த வகையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
110
1. சையாரா

மோஹித் சூரி இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஜூலை 18, 2025 அன்று வெளியானது. இந்த மியூசிக்கல் ரொமான்டிக் டிராமா படத்தில் அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா முக்கிய வேடங்களில் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆன இப்படம், உலகளவில் ரூ.570.33 கோடி வசூலித்தது.

210
2.காந்தாரா : தி லெஜண்ட் சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி, அவரே கதாநாயகனாக நடித்த இந்த கன்னடப் படம் அக்டோபர் 2, 2025 அன்று வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் ஆல்டைம் பிளாக்பஸ்டர் ஆன இப்படம், உலகளவில் ரூ.852.06 கோடி வசூலித்தது.

310
3.கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியான தமிழ்த் திரைப்படம் இது. இப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, நாகார்ஜுனா மற்றும் சௌபின் ஷாஹிர் போன்றோரும் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ.518 கோடி வசூலித்தது.

410
4.வார் 2

2019ல் வெளியான பிளாக்பஸ்டர் 'வார்' படத்தின் இரண்டாம் பாகம் இது. அயன் முகர்ஜி இயக்கிய 'வார் 2' ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியானது. ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி நடித்த இப்படம் உலகளவில் ரூ.364.35 கோடி வசூலித்தது.

510
5.சனம் தேரி கஸம்

ராதிகா ராவ் மற்றும் வினய் சப்ரு இயக்கிய இப்படம் 2016ல் முதலில் வெளியானது. பிப்ரவரி 7, 2025 அன்று மீண்டும் ரிலீஸ் ஆனது. ஹர்ஷவர்தன் ராணே, மாவ்ரா ஹோகேன் நடித்த இப்படம், மறுவெளியீட்டிற்குப் பிறகு ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.

610
6.மார்கோ

ஹனீஃப் அதேனி இயக்கிய இந்த சூப்பர்ஹிட் மலையாளப் படத்தில் உன்னி கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்தார். டிசம்பர் 20, 2024 அன்று வெளியான இப்படம், உலகளவில் ரூ.102 கோடிக்கு மேல் வசூலித்தது.

710
7.ஹவுஸ்ஃபுல் 5

ஹவுஸ்ஃபுல் தொடரின் ஐந்தாவது படம் இது. தருண் மன்சுகானி இயக்கியுள்ளார். ஜூன் 6, 2025ல் வெளியான இப்படம், உலகளவில் சுமார் ரூ.288.67 கோடி வசூலித்தது. அக்ஷய் குமார் போன்றோர் இந்த கில்லர் காமெடி படத்தில் நடித்திருந்தனர்.

810
8.கேம் சேஞ்சர்

எஸ். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த தெலுங்கு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்தார். ஜனவரி 10, 2025ல் வெளியான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்து உலகளவில் ரூ.186.28 கோடி வசூலித்தது.

910
9.மிஸஸ்

பிப்ரவரி 7, 2025 அன்று இந்த டிராமா திரைப்படம் நேரடியாக ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை ஆர்த்தி கடவ் இயக்கியுள்ளார். சான்யா மல்ஹோத்ரா, நிஷாத் தஹியா, கன்வல்ஜித் சிங் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1010
10.மகாவதார் நரசிம்மா

அஷ்வின் குமார் இயக்கத்தில் உருவான அனிமேஷன் காவியப் படம் இது. விஷ்ணுவின் நரசிம்ம அவதாரக் கதையைச் சொல்லும் இப்படம், ஜூலை 25, 2025ல் வெளியாகி, உலகளவில் ரூ.326.82 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஆனது.

Read more Photos on
click me!

Recommended Stories