2025-ல் சுனாமி போல் வசூலை வாரிசுருட்டிய டாப் 10 கம்மி பட்ஜெட் படங்கள் - ஒரு பார்வை

Published : Dec 06, 2025, 10:25 AM IST

2025-ம் ஆண்டு இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிக வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள் பற்றியும் அது எவ்வளவு வசூலித்தது என்பதை பற்றியும் இங்கே காணலாம்.

PREV
110
Top 10 Low Budget Hit Movies

10. சையாரா

மோஹித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடிப்பில் வெளியான இந்திப் படம் தான் சையாரா. இப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 18ந் தேதி திரைக்கு வந்தது. 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 570.33 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. இப்படம் இந்தியாவில் மட்டும் 329.73 கோடி ரூபாய் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

210
9. மகாவதார் நரசிம்மா

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் பக்திப் படம் தான் மகாவதார் நரசிம்மா. இப்படம் இந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 326.82 கோடி வசூலை வாரிக்குவித்திருந்தது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 251.3 கோடி வசூல் செய்திருந்தது.

310
8. டிராகன்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் டிராகன். இந்த ஆண்டு பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வந்த இப்படம் 36 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. உலகளவில் 151.83 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த இப்படம் இந்தியாவில் மட்டும் 102.55 கோடி வசூலித்து இருந்தது.

410
7. டியூட்

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, ஹ்ரிது ஹாரூன், ஆர். சரத்குமார் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் டியூட். இப்படம் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. உலகளவில் 114.3 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த டியூட் படம் இந்தியாவில் மட்டும் 73.13 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

510
6. லோகா: அத்தியாயம் 1 : சந்திரா

டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, நஸ்லென், சாண்டி, அருண் குரியன், சந்து சலீம் குமார் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 28-ந் தேதி திரைக்கு வந்த படம் லோகா. துல்கர் சல்மான் தயாரிப்பில் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 326.82 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தின் இந்திய வசூல் 251.3 கோடி ஆகும்.

610
5. தலைவன் தலைவி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் ஜூலை மாதம் 25-ந் தேதி திரைக்கு வந்த படம் தலைவன் தலைவி. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் 25 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. இப்படம் உலகளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதன் இந்திய வசூல் மட்டும் 85 கோடி ஆகும்.

710
4. டைஸ் இரே

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக நடித்த பேய் படம் டைஸ் இரே, அக்டோபர் 31ந் தேதி திரைக்கு வந்த இப்படம் 24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருந்தது. உலகளவில் 82.12 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த இப்படம் இந்தியாவில் மட்டும் 41.29 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது.

810
3. டூரிஸ்ட் ஃபேமிலி

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் எம். சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகன் ஆகியோர் நடிப்பில் இந்த ஆண்டு மே மாதம் 1ந் தேதி திரைக்கு வந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. ஆனால் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 87.23 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் இப்படம் 61.62 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

910
2. சூ ஃப்ரம் சோ

ஜே.பி. துமினாட் இயக்கத்தில் ஷானீல் கௌதம், ஜே.பி. துமினாட், சந்தியா அரகேரே ஆகியோர் நடிப்பில் வெளியான கன்னட படம் சூ ஃப்ரம் சோ. இந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி ரிலீஸ் ஆன இப்படம் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.122.83 கோடி வசூல் செய்திருந்தது. இதன் இந்திய வசூல் மட்டும் 92.33 கோடி ரூபாய் ஆகும்.

1010
1. லாலோ : கிருஷ்ணா சதா சகாயதே

அங்கித் சகியா இயக்கத்தில் ரீவா ரச், ஷ்ருஹத் கோஸ்வாமி, கரண் ஜோஷி மற்றும் மிஷ்டி கதேச்சா ஆகியோர் நடித்த படம் லாலோ : கிருஷ்ணா சதா சகாயதே. கடந்த அக்டோபர் 10ந் தேதி ரிலீஸ் ஆன இப்படம் வெறும் 50 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 109.5 கோடி வசூலை வாரிக்குவித்து முதலிடம் பிடித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 87 கோடி வசூல் செய்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories