கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Dec 06, 2025, 09:25 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காத விஜயா, அவனை எப்படியாவது துரத்த வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காமல் அவனை ஆள் வைத்து கடத்த சொல்லி அதில் வசமாக சிக்கிக் கொண்டார். இதையடுத்து இதுபோன்ற கிரிமினல் வேலைகளை செய்தால் போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என அண்ணாமலையும் வார்னிங் கொடுத்திருந்தார். இதையடுத்து மாடியில் தனியாக இருந்த மனோஜிடம் முத்து மற்றும் ரவி இருவரும் பேசுகின்றனர். அப்போது கிரிஷ் இந்த வீட்டில் இருந்தால் நமக்கு தான் பிரச்சனை, அவனை இப்போ வீட்டில் சேர்த்துக்கொண்டால், பிற்காலத்தில் அவனுக்காக சொத்தில் 4 பங்கு போட வேண்டும் என கிறுக்குத்தனமாக பேச, முத்துவும் ரவியும் டென்ஷன் ஆகிறார்கள்.

24
கிரிஷை பார்த்து பயந்துபோன விஜயா

இதையடுத்து இரவில் கிரிஷை எழுப்பி விட்டு அவனை ரோகிணியின் ரூமிற்கு சென்று தூங்குமாறு மீனா சொல்ல, கிரிஷும் எழுந்து ரோகிணி ரூமுக்கு செல்லும் போது திடீரென விஜயா வெளியே வருகிறார். அவரைப் பார்த்ததும் சட்டென அங்கிருந்த சேரில் அமர்ந்துகொள்கிறார் கிரிஷ். தூங்கியபடி அவன் சேரில் அமர்ந்திருப்பதை பார்த்து பயந்துபோன விஜயா, ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறார். பின்னர் எழுந்து ரோகிணியின் ரூமுக்கு செல்லும் கிரிஷ், அவர் அருகில் படுத்துக் கொள்கிறார். பின்னர் காலையில் கிரிஷ் தன் அருகில் படுத்திருப்பதை பார்த்த மனோஜ், பதறிப்போய் எழுந்து தன் அம்மாவிடம் சொல்ல, அவர் இதுகுறித்து விசாரிக்கிறார்.

34
சிந்தாமணியுடன் ஆலோசனை நடத்திய விஜயா

அப்போது மனோஜ் அங்கிள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் அவருடன் படுத்துக் கொண்டதாக கூறுகிறார் கிரிஷ். இப்படி கிரிஷின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என சிந்தாமணியிடம் ஆலோசனை கேட்கிறார் விஜயா, அப்போது சிந்தாமணி தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்ல, தயவு செஞ்சு அதெல்லாம் வேண்டாம். ஏற்கனவே அவனை கடத்தியபோதே என்னை போலீசில் பிடிச்சு கொடுக்க சொன்னார் என்னுடைய புருஷன். இப்போ வேறு எதாவது வில்லங்கத்தில் சிக்கினால் என்னை ஜெயிலிலேயே போட்டுவிடுவார் என கூறுகிறார்.

44
விஜயாவின் புது பிளான் என்ன?

அங்கு இருக்கும் ரோகிணியிடம் இனி அந்த கிரிஷை ரூமுக்குள் விடாதே என கூறும் விஜயா, நீ, நான், மனோஜ் மூவரும் அவனுடன் நெருக்கம் காட்டாமல் இருந்தால் தான் அவனை வீட்டை விட்டு துரத்த முடியும் என கூறுகிறார். கிரிஷை எப்படியாவது மனோஜுடன் பழக வைக்க வேண்டும் என்ற ரோகிணியின் ஆசையில் தற்போது மண்ணை அள்ளி போட்டிருக்கிறார் விஜயா. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது. கிரிஷை வீட்டை விட்டு துரத்தும் விஜயாவின் ஆசை நிறைவேறுமா? ரோகிணியும் மீனாவும் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories