Karthik and Revathi Get Together : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்று வெளியான புரோமோவில் கார்த்திக் இல்லாமல் தனியாக தவித்து வரும் ரேவதி சாப்பிடாமல் பட்டினி கிடந்து வருகிறார்.
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக் தான் யார் என்ற உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்லிவிட்டார். இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி கோபத்தில் நடக்க இருந்த கும்பாபிஷேகத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இனிமேல் தனக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி அங்கிருந்து மகள்கள் மற்றும் கணவருடன் புறப்பட்டு வந்தார்.
25
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
பின்னர் ரேவதியை தேடி வந்த கார்த்திக்கை தனது வீட்டை விட்டு துரத்திவிட்டார். மேலும், வீட்டிலிருந்த அவரது உடைகளையும் நெருப்பில் தீயிட்டார். இதையெல்லாம் பார்த்து சந்திரகலா ரசித்தார். ஆனால், ரேவதி மன வேதனை அடைந்தார். கார்த்திக் தான் தனது உலகமே. இந்த ஊர் உலகத்தில் எங்கு தேடினாலும் இப்படியொரு புருஷன் எனக்கு கிடைக்கமாட்டார். என்னை கண்ணைப் போன்று பாதுகாத்துக் கொள்ளும் பிரியமான மனுஷன். எப்பவோ நடந்த ஒரு விஷயத்திற்காக நீ என்னுடைய வாழ்க்கையை அழிக்க முடியாது.
35
கார்த்திகை தீபம் 2 சீரியல்
என்னுடைய வாழ்க்கை இவருடன் தான். நான் இவருடன் தான் போவேன். அவர் எல்லோரையும் சேர்க்க நினைக்கும் மனுஷன். அவரை தப்பா பேசாதே. அவர் இந்த குடும்பத்திற்காக செய்த எல்லாவற்றையும் நீ துச்சமாக கூட நினைக்கலாம். ஏனென்றால் உன்னுடைய ஈகோ அப்படி. ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியாது. ஏனா என்னுடைய உயிரே இவர் தான். இவர் இருக்கும் இடம் எப்படி இருந்தாலும், அது எனக்கு சொர்க்கம் என்று பேசினார்.
45
கார்த்திகை தீபம் 2
இந்த நிலையில் இன்றைய புரோமோ வீடியோவில் கார்த்திக்கை வீட்டை விட்டு துரத்திய விரக்தியில் ரேவதி சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார். மயில்வாகனம் மற்றும் ரோகிணி எவ்வளவு வற்புறுத்தியும் ரேவதி சாப்பிடவில்லை. அப்போது அவரிடம் பேசிய கார்த்திக் இப்போதைக்கு சூழ்நிலை சரியில்லை. கொஞ்சம் புரிஞ்சுக்கோ. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான். அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று பேசினார். இப்போது இருக்கும் சூழலில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒன்று சேர்வது கஷ்டம் என்று தெரிகிறது.
55
கார்த்திகை தீபம் 2 சீரியல் 1054 எபிசோடு புரோமோ வீடியோ
மேலும், இனிமேல் சந்திரகலா மற்றும் சிவனாண்டி ஆகியோரால் சாமுண்டீஸ்வரிக்கு ஆபத்து ஏற்படக் கூடும். அப்போது ரேவதி தான் கார்த்திக்கிற்கு தெரியப்படுத்த வசதியாக இருக்கும். இதனால் தான் இயக்குநர் இப்படி இருவரும் பிரிந்து இருப்பது போன்று காட்சி அமைத்திருக்கிறார். அதோடு, மாயில்வாகனத்திடம் தான் கான்ஸ்டபிள் போன் இருக்கிறது. அதில், தான் எல்லா ஆதாரமும் இருக்கிறது. இனி வரும் காலங்களில் சாமுண்டீஸ்வரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.