Thangamayil Drama Against Saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எல்லா உண்மையும் சொல்லப் போகிறார்கள் என்று தெரிந்தும் கூட தங்கமயில் நாடகமாடியது தான் ஆச்சரியமாக இருக்கிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இத்தனை நாட்களால் மனைவி சொல்லி வந்த எல்லா பொய்களையும் ஜீரணிக்க முடியாமல் தவித்த சரவணன் இன்று எல்லா உண்மைகளையும் சொல்ல வந்துள்ளார். ஆனால், அதற்குள்ளாக தங்கமயில் இனிமேல் நாங்கள் இருவரும் சண்டை போடமாட்டோம். ஒன்னா இருப்போம் என்று அழுதுகொண்டே சொல்லியுள்ளார்.
24
சரவணனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
இதையெல்லாம் பார்த்த சரவணனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு என்ன நடந்தது என்றால், நான் சொன்னால் உங்களால் தாங்க முடியாது. என்னாலயே தாங்கமுடியவில்லை. உங்களால் எப்படி தாங்க முடியும் என்று சொல்லி தனது அப்பாவை கட்டிப்பிடித்து அழுதார்.
34
குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி
இதைப் பார்த்த குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகன் வாழ்க்கையில் என்னமோ நடந்திருக்கிறது என்று வருத்தப்பட்டனர். அப்போது தான் தங்கமயில் இனிமேல் நாங்கள் இருவரும் சண்டையே போட மாட்டோம் என்று கோமதியிடம் கூறினார். இதைக் கேட்ட சரவணன், இவ்வளவு தூரம் நடந்த பிறகும் கூட நீ இன்னும் பொய் சொல்வதை நிறுத்தவில்லையா? அப்படி என்று கோபத்தில் அவரை அடிக்க பாய்ந்தார், தள்ளியும் விட்டார்.
44
உடம்பு முழுவதும் பொய்
இவள் உடம்பு முழுவதும் பொய் தான். நம்ம எல்லோரையும் பொய் சொல்லியே ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கதறி அழுதார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.