ஹீரோயின் போல் ஜொலிக்கும் அஜித் மகள்... குடும்பத்துடன் குதூகலமாக புத்தாண்டை கொண்டாடிய ஏகே - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jan 2, 2023, 7:44 AM IST

நடிகர் அஜித்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இந்த படத்தின் புரமோஷனிலும் அஜித் கலந்துகொள்ளவில்லை. தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

நடிகர் அஜித் சோசியல் மீடியாக்களை பயன்படுத்துவதில்லை. இதையே பாலோ பண்ணி வந்த அவரது மனைவி ஷாலினி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதில் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களை அவர் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அஜித்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஷாலினி.

இதையும் படியுங்கள்... கணவருடன் பாரில் குடியும்... கும்மாளமாக... நியூ இயர் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!

Tap to resize

அதில் அஜித், தனது காதல் மனைவி ஷாலினியுடன் மேட்சிங் மேட்சிங் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் இருவரும் ஜோடியாக கருப்பு நிற உடை அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். 

அதேபோல் மகள் அனோஷ்கா உடன் அஜித்தும் ஷாலினியும் தனித்தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதில் அனோஷ்காவை பார்த்த ரசிகர்கள், அவர் ஹீரோயின் போல் ஜொலிப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுதவிர குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படத்தையும், மகன் ஆத்விக் உடன் அஜித் எடுத்துக்கொண்ட கேண்டிட் புகைப்படத்தையும் பகிர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நடிகை ஷாலினி. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... 2022-ல் மட்டும் நயன் - விக்கி வாழ்க்கையில் இவ்வளவு நல்லது நடந்ததா? 5 பாகங்களாக பகிர்ந்த தகவல்! வைரல் போட்டோஸ்!

Latest Videos

click me!