ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Published : Jul 15, 2025, 10:18 AM IST

ஜூலை 7ந் தேதி முதல் 13ந் தேதி வரை ஓடிடியில் அதிக பார்வைகளைப் பெற்ற டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

PREV
15
Top 5 Most Watched Movies and Web series on OTT

ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் அதில் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அதில் வெளியாகும் படங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. இதுதவிர ஓடிடிக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் உள்ளன. இந்த நிலையில், ஜூலை 7-ந் தேதி முதல் 13ந் தேதி வரை ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது. அதன் பட்டியலை பார்க்கலாம்.

25
டாப் 5-ல் இடம்பிடித்த குட் வைஃப் வெப் தொடர்

நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் குட் வைஃப். இந்த வெப் தொடரில் பிரியாமணி, ஆரி அர்ஜுனன், சம்பத்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது தி குட் வைஃப் என்கிற அமெரிக்க தொடரை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. மொத்தம் 6 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 லட்சம் பார்வைகளை பெற்று 5ம் இடத்தை பிடித்திருக்கிறது..

35
அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் என்னென்ன?

அடுத்ததாக நாட்டையே உலுக்கிய ராஜீவ் காந்தில் கொலை வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தி ஹண்ட் என்கிற வெப் தொடர் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகும் இந்த வெப் தொடர் 17 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. தி கிரேட் இந்தியன் கபில் ஷோ சீசன் 3 நிகழ்ச்சிக்கு 25 லட்சம் பார்வைகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. இந்நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் உள்ளது. ஸ்குவிட் கேம் சீசன் 3 வெப் தொடர் 30 லட்சம் பார்வைகளுடன் 2ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது. முதலிடத்தில் பஞ்சாயத் சீசன் 4 வெப் தொடர் உள்ளது. இந்தி வெப் தொடரான இது அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இது ஓடிடியில் 42 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

45
அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள்

கீர்த்தி சுரேஷின் உப்பு கப்புரம்பு என்கிற திரைப்படம் தான் இந்த வாரம் 5ம் இடத்தை பிடித்திருக்கிறது. அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆன இந்த வெப் தொடர் 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் என்கிற ஆங்கிலப் படம் இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 23 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது. அடுத்ததாக மாதவன் நடிப்பில் இந்தியில் வெளியான ஆப் ஜெய்சா கொய் என்கிற திரைப்படம் 24 லட்சம் பார்வைகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

55
முதலிடத்தில் தக் லைஃப்

அதிக வியூஸ் அள்ளிய படங்களின் பட்டியலில் ரெய்டு 2 என்கிற இந்தி திரைப்படம் தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படம் 31 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. அதேபோல் இந்த லிஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளது கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் தான். இப்படம் திரையரங்குகளில் வெளியானபோது படுதோல்வியை சந்தித்தாலும், ஓடிடியில் இப்படத்தை ரசிகர்கள் போட்டிபோட்டு பார்த்து வருகிறார்கள். அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் தக் லைஃப் திரைப்படத்தை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 33 லட்சம் பேர் பார்த்துள்ளார்களாம்.

Read more Photos on
click me!

Recommended Stories