இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் என். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான "பத்து தல" திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். அதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், "10 தல" திரைப்படமும் சுமாரான விமர்சனங்களை தான் பெற்றது. இந்த சூழலில் தான் தேசிங்கு பெரியசாமியுடன் ஒரு திரைப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்தார்.
ஏற்கனவே துல்கர் சல்மானை வைத்து "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்கின்ற மெகா ஹிட் கமர்சியல் வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் தேசிங்கு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் எஸ்டிஆர் 48வது திரைப்பட பணிகள் துவங்கியது.