Published : Sep 26, 2024, 08:53 PM ISTUpdated : Sep 26, 2024, 08:59 PM IST
ஒவ்வொரு வாரமும், வியாழக் கிழமைகளில் வெளியாகும் TRP ரேட்டிங்கை வைத்து தான், அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்படும் டாப் 10 சீரியல்கள் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை கைப்பற்றிய அந்த 10 சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த வருடத்தின் 38-ஆவது வாரத்தில் அர்பன் மற்றும் ரூரல் பகுதிகளில் அதிகம் பார்க்கப்பட்ட சீரியலாக கயல் சீரியல் உள்ளது. இந்த வாரம், TRP பட்டியலில் 9.7 புள்ளிகளுடன் கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. "எப்போது கயல் - எழில் திருமணம் நடைபெறும் என ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ஒருவழியாக எழில் - கயல் திருமணம் இந்த வாரத்தில் நடக்கும் என தெரிகிறது. அதே நேரம் கயல் திருமணத்தை நிறுத்த கயலின் பெரியப்பா மற்றும் பெரியம்மா ஒருபுறம் சதி திட்டம் தீட்ட, இன்னொருபுறம், கயலின் மாமியார் மற்றும் எழிலை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பெண் ஒருவரும் முயற்சி செய்து வருகிறார்கள். இவர்களின் முயற்சியை முறியடித்து கயல் - எழில் திருமணம் எப்படி நடைபெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த சீரியலை தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ளது 'சிங்கப்பெண்ணே'. ஆனந்திக்கு அன்பு தான் அழகனா? என்கிற சந்தேகம் வந்துள்ள நிலையில், மகேஷின் காதல் விவகாரம் தெரிய வந்ததால், அன்பு தன்னுடைய காதலை ஆனந்தியிடம் சொல்லாமல் மறைகிறார். அதே நேரத்தில் எப்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியே வரும்? அப்படி வெளியாகும் பட்சத்தில் அன்பு மீது தான் இந்த பழி விழுமா? ஆனந்தி இதனை எப்படி சமாளிக்க போகிறார் என பல பரபரப்பான காட்சிகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. மேலும் இந்த வாரம் 'சிங்கப்பெண்ணே' சீரியல் 8.56 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.
25
Moonru Muduchi and Marumagal Serial:
இந்த வாரம் மூன்றாவது இடத்தில், சமீபத்தில் துவங்கப்பட்ட 'மூன்று முடிச்சு' சீரியல் உள்ளது. கதாநாயகிக்கு எதிராக பல பிரச்சனைகள் வந்தாலும், அதனை அசால்ட்டாக ஒதுக்கி தள்ளிவிட்டு செல்லும் அவர், குடிகாரனாக இருக்கும் ஹீரோவை மாற்றி எப்படி திருமணம் செய்து கொண்டு, அவரை மாற்றுவார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம் என்பது தெரிகிறது இந்த சீரியல் 8.40 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, 'மருமகள்' சீரியல் உள்ளது. ஆதிரையின் திருமணத்தை நல்ல படியாக நடத்த விட கூடாது என்பதை ஆதிரையின் சித்தியும், பிரபுவின் திருமணத்தை நிறுத்துவதில் அவரது சித்தப்பாவின் குடும்பமும் கங்கணம் கட்டி கொண்டு திரியும் நிலையில், எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து எப்படி இந்த திருமணம் நடக்க போகிறது என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த சீரியல்ல 8.32 டிஆர்பி புள்ளிகளை நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே டாப் 3 பட்டியலில் இடம்பிடித்து வந்த 'சிறகடிக்க ஆசை' சீரியல், இந்த வாரம் TRP-யில் கொஞ்சம் பின்தங்கியுள்ளது. அந்த வகையில் இந்த தொடர், 7.77 டிஆர்பி புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது. வரும் வாரங்களில், ரோகினி மூலம் சத்யா தான் விஜயாவின் பணத்தை திருடினார் என்று தெரியவந்தால், அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும். அதே போல் விஜயா நடத்தி வரும் பரதநாட்டிய பள்ளியில், இருக்கும் காதலர்களால் விரைவில் விஜயாவும் பெரிய சிக்கலை சந்திக்க நேரும் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பின்னர்... மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் சூடு பிடிக்க துவங்கியுள்ளது 'சுந்தரி' சீரியல். இந்த தொடர், 7.17 டிஆர்பி புள்ளிகளுடன் இந்த வாரம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. சுந்தரியின் மாமா முருகன் உஷா திருமணத்தை... மணமகனின் தந்தை நிறுத்தியதற்கான காரணத்தை கண்டு பிடித்து, மாப்பிள்ளையின் தங்கையை பத்திரமாக மீட்டுவிட்ட நிலையில், உஷா திருமணம் அனைவரின் விருப்பத்தை போல் நடக்கும் என தெரிகிறது. அதே போல் கூடிய விரையில் வெற்றி - சுந்தரியின் திருமணமும் நடக்க உள்ள நிலையில்... இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போடா சீரியல் குழு முடிவு செய்துள்ளது.
45
Pandian Stores and Malli Serial
இந்த வாரம் டிஆர்பியில், 6.80 புள்ளிகளுடன், ஏழாவது இடத்தை பிடித்துள்ளது 'மல்லி' சீரியல். மல்லி, விஜய்யின் மகளுக்காக பொய்யாக திருமணம் செய்து கொண்டாலும், பின்னர் மல்லி விஜய் மீது ஆசைப்படுகிறார். அவருடைய மகளையும் தன்னுடைய மகளாகவே பார்க்கிறார். விஜய்யும் மல்லியின் நல்ல மனதை புரிந்து கொண்ட நிலையில்... மல்லிக்கு வரும் பிரச்சனைகளை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்பதே இந்த சீரியலின் பரபரப்பான கதைக்களமாக சென்று கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து இந்த வாரம், 8-வந்து இடத்தில, பாண்டியன் ஸ்டார் சீரியல் உள்ளது. கடந்த வாரத்தை விட... இந்த வாரம், விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி வரிசையில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதற்க்கு காரணம், வழக்கத்தை விட, இந்த சீரியலின் சுவாரஸ்யம் குறைந்தது தான் என கூறப்படுகிறது. அதே போல் இந்த வாரம் பாக்கிய லட்சுமி சீரியலை முந்தி உள்ளது பாண்டியன் ஸ்டோர்.
விஜய் டிவியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் 'பாக்கிய லட்சுமி' தொடர்... ராம மூர்த்தியின் மறைவுக்கு பின்னர், TRP-யில் மிகவும் பின் தங்கி விட்டது. அந்த வகையில், இந்த வாரம் பாக்கிய லட்சுமி சீரியல், 6.34 டிஆர்பி புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதே போல் இந்த வாரம் கடைசி இடத்தை பிடித்துள்ளது... சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ராமாயணம்' சீரியல். ராமாயணம் தொடர் டாப் 10 டிஆர்பியில் இடம்பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.