இந்த சூழலில் தான் இந்த 2024ம் ஆண்டின் துவக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் தளபதி விஜய். ஆனால் அவர் தனது கட்சியை குறித்து மட்டும் அறிவிக்காமல், யாருமே சற்றும் எதிர்பார்க்காத பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார். அது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, சினிமாவிற்கு முழு நேர ஒய்வை கொடுத்துவிட்டு, முற்றிலும் அரசியல் தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள இருப்பதாக அதிர வைக்கும் தகவல்.
பொதுவாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்பவர்கள் திரைப்படங்களில் தங்களுக்கான மவுசு குறைந்த பிறகு அப்படி ஒரு முடிவை எடுப்பார்கள். ஆனால் 150லிருந்து 200 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுக்கொண்டு, தன்னுடைய கால் சீட்டுக்காக காத்திருக்கும் பல இயக்குனர்களை அருகில் வைத்துக்கொண்டு புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் தளபதி விஜய் இந்த முடிவை எடுத்தது பலருக்கு ஆச்சரியத்தையும், அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்தது. அடுத்தடுத்து தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிவித்த விஜய், இம்மாத இறுதியில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார்.