தக் லைஃப் படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ லாஞ்ச் எப்போது?

Published : May 15, 2025, 11:20 AM IST

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

PREV
14
'Thug Life' Audio Release Date

37 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் படம் 'தக் லைஃப்'. இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இப்படத்தில் திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோருடன் சிம்புவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.

24
தக் லைஃப் படக்குழு

ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், அபிராமி, நாசர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் படத்திலிருந்து விலகினர். துல்கருக்குப் பதிலாக சிம்பு நடிக்கிறார். அதேபோல் ஜெயம் ரவிக்கு பதில் அசோக் செல்வன் நடித்துள்ளார். மணிரத்னத்துடன் வழக்கமாகப் பணியாற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தான் இப்படத்திற்கும் இசையமைத்து உள்ளார்.

34
கேங்ஸ்டர் படமாக உருவான தக் லைஃப்

ஆக்‌ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக 'தக் லைஃப்' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கமல்ஹாசன் 'ரங்கராஜ் சக்திவேல் நாயக்கர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அசோக் செல்வன், அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜிஷு சென்குப்தா, சான்யா மல்ஹோத்ரா, ரோஹித் ஷெரஃப், வையாபுரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

44
தக் லைஃப் ஆடியோ லாஞ்ச்

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மே 17ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான புது தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 24-ந் தேதி சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மே 17ந் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. படமும் திட்டமிட்டபடி ஜூன் 5ந் தேதி வெளியாகும் என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories