திருமணத்துக்கு பின்னரும் ரகசிய உறவில் இருந்த பிரபலங்கள் யார்... யார்?

Published : May 15, 2025, 08:20 AM IST

திருமணமான பின்னும் சர்ச்சைக்குரிய உறவுகளால் பேசுபொருள் ஆன தென்னிந்திய நடிகர்கள் சிலரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Controversial Relationships of Actors

திரைப்பிரபலங்கள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அப்படி திருமணத்துக்கு பின்னர் வேறு ஒருவருடன் உறவில் இருந்த சில நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய உறவில் இருந்த பிரபலங்களில் ஒரே ஒரு நடிகை மட்டுமே காதலித்தவரை திருமணம் செய்து கொண்டார். மற்றவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்துவிட்டனர், சிலர் வேறு நபர்களை மறுமணம் செய்து கொண்டனர்.

26
தபு - நாகார்ஜுனா காதல்

தபுவுக்கு தற்போது 51 வயது. இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாகார்ஜுனாவுடன் தபுவுக்கு உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நாகார்ஜுனாவுக்கு திருமணமாகி நாக சைதன்யா என்ற மகன் இருந்தார். பதினைந்து ஆண்டுகள் இந்த உறவை இருவரும் ரகசியமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அமலாவை மணந்து தபுவுடனான உறவை முடித்துக் கொண்டார்.

36
ஸ்ரீதேவி - போனி கபூர்

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், மோனாவை மணந்தார் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அப்போதே நடிகை ஸ்ரீதேவியுடன் போனி கபூர் காதலில் விழுந்தார். முதல் மனைவியை விவாகரத்து செய்யும் முன்னரே போனி கபூரும் ஸ்ரீதேவியும் உறவில் இருந்தனர். திருமணத்துக்கு முன்னரே ஸ்ரீதேவி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மோனாவை விவாகரத்து செய்த பின்னர் ஸ்ரீதேவியை மணந்துகொண்டார் போனி கபூர்.

46
கமல்ஹாசன் - கெளதமி

கமல்ஹாசன் மற்றும் கௌதமிக்கு இடையே உறவு இருந்தது. 1999 இல் சரிகா உடனான விவாகரத்துக்குப் பின்னர் கௌதமியும், கமல்ஹாசனும் காதலிக்க தொடங்கினர். 15 ஆண்டுகள் நீடித்த இந்த உறவில் இருவரும் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

56
நயன்தாரா - பிரபுதேவா

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் உறவு இருந்தது. பிரபுதேவாவுக்கு அப்போது ரம்லத் உடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தனர். இருந்தபோதும் நயன்தாரா உடன் உறவில் இருந்தார் பிரபுதேவா. ரம்லத் எதிர்ப்பு தெரிவித்ததால் நயன்தாரா - பிரபுதேவா உறவு முடிவுக்கு வந்தது. தற்போது பிரபுதேவா முதல் மனைவியை விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொண்டார். நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்துள்ளார்.

66
கெனிஷா - ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. விவாகரத்துக்கு முன்னரே பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு உறவு இருப்பதாக ஆர்த்திதி குற்றம் சாட்டினார். முதலில் அதை மறுத்து வந்த ரவி, தற்போது கெனிஷாவுடன் ஜோடியாக சுற்றி வருகிறார். இது கோலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories