நடிகர் ரவி மோகனின் குடும்பப் பிரச்சினை கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் பிரிய முடிவெடுத்ததை அடுத்து, அவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்குக் காரணமாக கூறப்படும் பாடகி கெனிஷா, தொடர்ந்து ரவி மோகன் உடன் பொது நிகழ்ச்சிகளில் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆர்த்தி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு பதிவை வெளியிட்டார். கோலிவுட் நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார் ஆகியோர் ஆர்த்திக்கு ஆதரவாகப் பேசினர்.
24
கெனிஷா தோழியின் பதிவு
ரவி மோகன், ஆர்த்தியிடமிருந்து பிரிவதற்காகக் கூறிய காரணங்கள் பொய்யானவை என்று பல யூடியூப் சேனல்களில் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. ஜெயம் ரவியிலிருந்து, ரவி மோகன் எனப் பெயர் மாற்றியதிலும் கெனிஷாவின் பங்கு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனிடையே கெனிஷாவின் நெருங்கிய தோழி விஜயந்தி ராஜேஷ்வர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டார். அதை கெனிஷா மறுபகிர்வு செய்ததால் அது பெரிய செய்தியானது. கெனிஷாவைப் பற்றி மக்கள் மிகவும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாக விஜயந்தி ராஜேஷ்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
34
அமைதியாக இருக்க சொன்ன கெனிஷா
"கடந்த சில நாட்களாக நான் அமைதியாக இருந்ததும், நீ (கெனிஷா) என்னை அமைதியாக இருக்கச் சொன்னதும் எவ்வளவு கடினமாக இருந்தது என்பது எனக்குத் தெரியும். உன்னை எனக்குத் தெரியும். என் அன்பு ரவி அண்ணாவுடன் நீ இணையுமுன் உன்னை எனக்குத் தெரியும். மக்கள் எவ்வளவு தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், கொடூரமானவர்கள், ஆபாசமாகப் பேசுகிறார்கள் என்பதற்கு இந்தக் கடினமான காலகட்டத்தில் நான் சாட்சி" என்று விஜயந்தி ராஜேஷ்வர் அந்த பதிவில் எழுதி இருந்தார்.
இப்படி கெனிஷா - ரவி மோகன் பற்றிய செய்திகள் தினசரி உலா வந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது அவர்களை பற்றிய மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வலைப்பேச்சு அந்தணன் கூறி உள்ளார். அதன்படி நடிகர் ரவி மோகன், கெனிஷாவுக்கு மும்பையில் புது வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.10 கோடி என்றும் கூறியுள்ள அவர், இதுதவிர கோவாவில் கெனிஷா நடத்தி வரும் ஹீலிங் செண்டருக்காக ரூ.5 கோடி செலவிட்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.