இன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளைக் காட்டிலும் ஓடிடி தளங்களில் தான் திரைப்படங்களைப் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திரையரங்குகளில் வசூல் சாதனை படைப்பது போல, ஓடிடி தளங்களிலும் படங்களின் வரவேற்பை அறிய பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமானது பார்வைகளின் எண்ணிக்கை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் பார்த்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
24
'ஜுவல் தீஃப்' படம் படைத்த சாதனை
சைஃப் அலி கான் நடித்த 'ஜுவல் தீஃப்' என்ற இந்தி திரைப்படம்தான் இந்த சாதனையைப் படைத்துள்ளது. கூகி குலாத்தி மற்றும் ராபி கிரேவால் இயக்கியுள்ளனர். ஏப்ரல் 25ந் தேதி அன்று நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான இந்தப் படம், முதல் வாரத்தில் 7.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இரண்டாவது வாரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 8.3 மில்லியனை எட்டியது. இதன்மூலம், முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 16.1 மில்லியன், அதாவது 1.61 கோடிப் பார்வைகளைப் பெற்றுள்ளது.
34
விமர்சன ரீதியாக சொதப்பிய 'ஜுவல் தீஃப்'
இந்த சாதனை, படத்தை மேலும் பலர் பார்க்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஹெய்ஸ்ட் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில், சைஃப் அலி கானுடன் ஜெய்தீப் அஹ்லாவத், நிக்கிதா தத்தா, குணால் கபூர், குல்புஷன் கர்பந்தா, உஜ்ஜ்வல் கௌரவ், ககன் அரோரா, ஷாஜி சவுத்ரி, சுமித் குலாத்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டேவிட் லோகன் திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்திற்கு சுமித் அரோரா வசனம் எழுதியுள்ளார். ஜிஷ்ணு பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆரிஃப் ஷேக் படத்தொகுப்பு செய்துள்ளார். 'பதான்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளதால் இப்படத்திற்கு நெட்ஃபிளிக்ஸில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் ஓடிடியில் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது.