வசூலில் பலத்த அடி வாங்கிய 'தக் லைஃப்'.. நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published : Jun 09, 2025, 09:43 AM ISTUpdated : Jun 09, 2025, 09:48 AM IST

‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த நான்கு நாட்கள் செய்த வசூல் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Thug Life Movie Box Office Collection Day 4

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தத் திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் - கமல் இணைந்து இருந்ததால் ரசிகர்கள் படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

25
‘தக் லைஃப்’ படத்தை கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்

ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க கூடிய கதையாக, எந்த ஒரு திருப்பமும் இல்லாமல், சுவாரஸ்யம் சிறிதும் இன்றி படம் இருந்தது. படத்தைப் பார்த்த பலரும் இது மணிரத்னத்தின் படம்தானா? என கேள்வி எழுப்பினர். மேலும் திரை விமர்சகர்களும் படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களையே கூறினர். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்களும் படத்தை திட்டித் தீர்த்தனர்.

35
வசூலை பாதித்த காரணிகள்

படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக செட்டாகாத ஒரு கதையாகும். “வளர்ப்புத் தந்தையின் காதலியை அடைவதற்கு துடிக்கும் வளர்ப்பு மகன்” என்கிற ஒரு லைன் கதையாக இது இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். இது போன்ற கதையை எப்படி குடும்பத்துடன் சென்று பார்ப்பது என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை கொட்டித் தீர்த்து வந்தனர். படத்தின் இறுதியில் சிம்பு கொலை செய்யப்படுவது போல காட்டப்படுவதால், சிம்பு ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது.

45
‘தக் லைஃப்’ - நான்கு நாள் வசூல் நிலவரம்

இதுபோன்ற காரணங்களால் இந்த திரைப்படம் வசூலில் பலத்த அடி வாங்கி உள்ளது. படம் வெளியான முதல் நாள் ரூ.15.5 கோடி வசூலையும், இரண்டாவது நாள் வெறும் ரூ.7.15 கோடி வசூலை மட்டுமே பெற்றது. மூன்றாவது நாளான சனிக்கிழமை ரூ.7.75 கோடியும், நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.6.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நான்கு நாட்களில் இந்திய அளவில் ரூ.36.90 கோடி வசூலை மட்டுமே ‘தக் லைஃப்’ திரைப்படம் வசூலித்துள்ளதாக Sacnik இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் படம் ரூ.50 முதல் ரூ.70 கோடி வரை வசூலித்திருப்பதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

55
அமைதி காக்கும் ‘தக் லைஃப்’ படக்குழு

படங்களின் வசூல் நிலவரங்கள் முதல் நாளே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் நிலவரம் குறித்து படக் குழுவினர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். மேற்குறிப்பிட்ட வசூல் நிலவரங்கள் பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சில இணையதளங்களில் அடிப்படையில் எடுக்கப்பட்டது மட்டுமே. தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்த வசூல் நிலவரங்கள் பகிரப்படுகின்றன. அதிகாரப்பூர்வ வசூல் நிலவரங்களை படக்குழுவினர் வெளியிடும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories