Published : Nov 15, 2024, 09:49 AM ISTUpdated : Nov 15, 2024, 11:10 AM IST
OTT Release Movies : தியேட்டரில் ரிலீஸ் ஆன கங்குவா திரைப்படம் ஏமாற்றம் தந்த நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. கங்குவா படம் பார்த்து பாராட்டியவர்களை விட விமர்சித்தவர்கள் தான் ஏராளம். அந்த அளவுக்கு கங்குவா ரசிகர்களை கதறவிட்டுள்ளது. கங்குவா பார்த்து அப்செட்டில் இருக்கும் ரசிகர்களை சில் பண்ண இந்த வாரம் ஓடிடியில் அசத்தலாக பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
25
Petta Rap
பேட்ட ராப்
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம் பேட்ட ராப். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். இதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகை சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த இப்படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
35
Nayanthara Beyond The Fairy Tale
நயன்தாரா Beyond The Fairy Tale
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களின் திருமணத்தை ஒரு டாக்குமெண்ட்ரி படமாக் நெட்பிளிக்ஸ் உருவாக்கி இருந்தது. இதை கெளதம் மேனன் டைரக்ட் செய்துள்ளார். இந்த டாக்குமெண்ட்ரி படம் கடந்த 2 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது ஒருவழியாக வெளியாக உள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 18-ந் தேதி இந்த டாக்குமெண்ட்ரி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆக உள்ளது.
போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நாயகனாக நடித்த படம் சார். இப்படம் கடந்த அக்டோபர் 18-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், இப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. அதன்படி சார் திரைப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகிறது.
55
Deadpool and Wolverine
மற்ற மொழி படங்கள்
அடித்தட்டு என்கிற மலையாள படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்டிரீம் ஆகிறது. தெலுங்கில் ரேவு ஆஹா ஓடிடியிலும், உஷா பரிநயம் ஈடிவி வின் தளத்திலும், மா நன்னா சூப்பர்ஹீரோ அமேசான் பிரைமிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்தியில் தி மேஜிக் ஆஃப் ஷிரி ஜியோ சினிமாவிலும், ஃபிரீடம் அட் மிட்நைட் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. ஆங்கிலத்தில் டெட்பூல் அண்ட் வோல்வரின் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.