Maanaadu Success Meet: ஹிட் கொடுத்த 'மாநாடு'... வெற்றி விழாவை புறக்கணித்த சிம்பு! இது தான் காரணமா?

First Published Dec 21, 2021, 5:19 PM IST

ஒற்றை வெற்றி படத்திற்கு ஏங்கிய சிம்புவிற்கு, தற்போது 'மாநாடு' திரைப்படம் வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ள நிலையில், இந்த படத்தின் வெற்றிவிழாவில் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். இதற்க்கு காரணம் என்ன? என்பது குறித்த சில காரணங்களும் கிசுக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சிம்பு (simbu) நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி (suresh kamatchi) தயாரிப்பில் உருவான "மாநாடு" (Maanaadu) திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியாகி உலகமெங்கும், மற்றும் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

'மாநாடு' படத்தின் முதல் நாள் வரவேற்பே படக்குழுவை திருப்தி படுத்திய நிலையில்.. படத்தின் வெற்றிக்கு சிம்பு தன்னுடைய அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது மட்டும் இன்றி, தயாரிப்பாளரோடு இரண்டாவது நாளே கேக் வெட்டி இந்த படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

ஆனால் இப்படம் தற்போது வரை திரையரங்குகளில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று படக்குழு இன்று பிரமாண்ட சக்ஸஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட இந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்கள், டெக்னிஷியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆனால் இப்படத்தின் ஹீரோ சிம்பு (Simbu) மட்டும் இதில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் அவர் மற்றொரு படப்பிடிப்பில் இருப்பதால் தான் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டாலும், சிம்புவின் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவிக்கு விற்றதை எதிர்த்து டி. ராஜேந்தர் பதிவு செய்துள்ள வழக்கும் காரணமாக இருக்கலாம் என்கிற தகவல் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி ட்வீட் ஒன்றை போட்ட நிலையில், இயக்குனர் பாரதி ராஜாவும் இவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இதன் காரணமாக கூட, சிம்பு சுமார் 11 வருடங்களுக்கு பின்னர் வெற்றிப்படமாக அமைந்த 'மாநாடு' படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

click me!