Theatre Releases : ஜெயிலர் 2 மட்டுமில்ல... ஆயுத பூஜை லீவுக்கு இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா? முழு லிஸ்ட் இதோ

Published : Oct 14, 2026, 11:35 AM IST

Theatre Releases for Ayudha Pooja 2026 : ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை ஒட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருவதால், அதில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
15
ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்

பண்டிகைக் காலம் என்றாலே புதுப்படங்களுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் வருகிற அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகைகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வருகின்றன. அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு இரு தினமும் வார விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் ஆயுத பூஜைக்கு இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சில படங்கள் தியேட்டருக்கு வர உள்ளன. அந்த படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
ஜெயிலர் 2

ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட முதல் படம் ஜெயிலர் 2. இப்படம் அக்டோபர் 15ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன், சூரஜ், வித்யா பாலன், மிர்ணா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தை போல் இந்த படமும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

35
ட்ரோன்ஸ்

ஆயுத பூஜை ரேஸில் அடுத்ததாக இணைந்த படம் ட்ரோன்ஸ். இப்படத்தில் பரிதாபங்கள் டிராவிட் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் டிவி குரேஷியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராகவ் என்பவர் இயக்கிய இப்படத்தினை ஜிஎம் மார்கன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரி இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 16ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

45
டைட்டானிக்

கயல் ஆனந்தி மற்றும் கலையரசன் ஜோடியாக நடித்துள்ள படம் டைட்டானிக். இப்படத்தை ஜானகிராமன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்த இப்படம் அக்டோபர் 16ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரித்துள்ளார். ராதாகிருஷ்ணன் தனபால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

55
ரணபாலி

மேற்கண்ட மூன்று படங்களும் நேரடி தமிழ் படங்கள். இதனுடன் ரணபாலி என்கிற பான் இந்தியா படமும் திரைக்கு வருகிறது. ரணபாலி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தப் படத்தை ராகுல் சங்ரித்யன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அஜய் அதுல் இசையமைத்துள்ளார். தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் அக்டோபர் 16ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories