கமல்ஹாசனை வற்புறுத்தி இளையராஜா எழுத வைத்த சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

Published : Apr 27, 2026, 05:02 PM IST

Ilaiyaraaja and Kamalhaasan: பன்முக கலைஞரான கமல்ஹாசனுக்கு ஒரே ஒரு வரியை ஹிண்டாக கொடுத்து விட்டு முழு பாடலையும் இளையராஜா எழுத வைத்த கதை உங்களுக்கு தெரியுமா?

PREV
16
உலக நாயகன் கமல் ஹாசன்:

உலக நாயகன் கமல் ஹாசன், தனது பன்முகத் திறமையால் பல வெற்றிபெற்ற படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி, இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் இயக்கிய படங்களான, ஹே ராம், விரும்பாண்டி போன்ற படங்கள் மிகவும் தனித்தன்மை கொண்ட படைப்பாகவே பார்க்கப்படுகிறது.

26
விருமாண்டி:

அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம் தான் 'விருமாண்டி' (2004) ஆண்டு வெளியான இந்த படம், தற்போது வரை பல கமல் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் படமாக உள்ளது. இதில் கமலின் தனித்துவமான நடிப்பை தாண்டி, இவரது இயக்கமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. புத்திசாலித்தனமான, சிக்கலான திரைக்கதையால் இந்த படம் ரசிகர்களை மூழ்கச் செய்தது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடிக்க பசுபதி, மற்றும் நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

36
இளையராஜாவின் இசை:

விருமாண்டி விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதே போல் இந்த படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை மற்றும், பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

46
சம்மதிக்க வைத்த கமல்:

விருமாண்டி படத்தில் சண்டை மற்றும் வன்முறை காட்சிகள் உள்ளதாக கூறி இசையமைக்க இசையமைப்பாளர் இளையராஜா முதலில் மறுத்துவிட்டதாகவும், பின்னர் ஒருமுறை கமல் ஹாசன் நேரில் இளையராஜாவிடம் சென்று, படத்திற்கான இசையை உருவாக்க வேண்டுமென கேட்டதோடு படத்தின் கதையை முழுமையாக கூறி சம்மதிக்க வைத்தாராம்.

மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்த விவகாரம்... விஜய் மீதான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

56
கமல் எழுதிய பாடல்

ஜல்லிக்கட்டில் இடம்பெறுவது போல் இருக்கும் பாடலான கொம்புல பூவை சுத்தி என்கிற பாடலை மிகவும் உற்சாகமாக இசையமைத்து, பாடி ஆட்டம் போட்ட இளையராஜா, கமல்ஹாசனை வற்புறுத்தி ஒரு பாடலை வேற எழுத வைத்துவிட்டாராம். அதாவது உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல என தொடங்கும் காதல் பாட்டுக்கு இந்த ஒரு வரியை மட்டும் கூறிவிட்டு, இந்த பாடலின் மீதியை நீ தான் எழுத வேண்டும். உனக்கு மட்டுமே அந்த காதலின் ஆழம் புரியும் என கூறிய நிலையில்... பின்னர் கமல் தான் இந்த முழு பாடலையும் எழுதி முடித்துள்ளார். இதன் பின்னரே இந்த சூப்பர் ஹிட் பாடல் உருவானதாம்.

66
இன்றுவரை பேசப்படும் இசை மற்றும் பாடல் வரிகள்:

இளையராஜாவின் இசையும், கமல் ஹாசனின் படைப்பாற்றலும் இணைந்து, படத்தை மேலும் சிறப்பாக உருவாக்கியுள்ளது. இந்த பாடல்கள் இன்று கூட இளைஞர்கள் மற்றும் காதலர்களிடையே பிரபலமாகவே பேசப்படுகின்றன. கமல் ஹாசன் மற்றும் இளையராஜாவின் இந்த ஒற்றுமையான கூட்டாண்மை, தமிழ் சினிமாவின் சிறப்பான படைப்புகளுக்கு அடையாளம் எனலாம்.

பாட்டி ஆகப்போகும் ஜோரில் அனிதா விஜயகுமார் - கலக்கலாக நடந்த அருண் விஜய் மருமகள் தியா வளைகாப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories