இன்றைய முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த முதல்வன் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியானது. அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமானா இப்படத்தில் அர்ஜுன் , மனிஷா கொய்ராலா மற்றும் ரகுவரன், வடிவேலு மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு மற்றும் சுஜாதாவின் வசனங்கள் இடம்பெற்றன.