பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஹாரர் காமெடி திரைப்படமான 'தி ராஜா சாப்' வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் 'தி ராஜா சாப்'. மாருதி இயக்கிய இதில் மாளவிகா மோகனன், ரித்தி குமார், நிதி அகர்வால் நாயகிகளாக நடிக்கின்றனர். இது பிரபாஸின் முதல் ஹாரர் காமெடி படம். அனைத்து பணிகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தி ராஜா சாப் திரைப்படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.
24
தி ராஜா சாப் முதல் விமர்சனம்
இந்நிலையில், தி ராஜா சாப் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி பாசிட்டிவ் டாக் பெற்றுள்ளது. பிரபல ஓவர்சீஸ் விமர்சகரான உமைர் சந்து, இது ஒரு பைசா வசூல் மாஸ் என்டர்டெய்னர் படம் என்று கூறியுள்ளார். பிரபாஸ் தனது நடிப்பு மற்றும் தோற்றத்தால் அனைவரையும் கவர்வார். அவரது பாத்திரம் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். சஞ்சய் தத் பாத்திரம் சர்ப்ரைஸாக இருக்கும். கடைசி 30 நிமிடங்கள் மற்றும் கிளைமாக்ஸ் படத்திற்கு பலம். படத்தில் சில போரிங் தருணங்கள் இருந்தாலும், இது ஒரு பக்கா பண்டிகை காலப் படம். நிதி அகர்வால் அழகாக இருக்கிறார், பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. இயக்கம் மற்றும் விஎஃப்எக்ஸ் வேற லெவலில் உள்ளது என பாராட்டி பதிவிட்டு உள்ளார்.
34
1000 கோடி அடிக்குமா?
'தி ராஜா சாப்' திரைப்படத்தின் சென்சார் முடிந்து, இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் 50% காமெடி, 20% ஃபேன்டஸி, 20% எமோஷன்ஸ் இருப்பதாக இயக்குனர் மாருதி கூறியுள்ளார். நடிகர் பிரபாஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக கமர்ஷியல் படத்தில் நடித்திருப்பதால் தி ராஜா சாப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசருக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் கிளிக் ஆனால் இந்த ஆண்டு ஆயிரம் கோடி வசூல் அள்ளும் முதல் படமாக ராஜா சாப் இருக்கும்.
ராஜா சாப் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடித்திருக்கிறார். இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் உலகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் ஜனநாயகனுக்கு பான் இந்தியா அளவில் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.