ஓடிடி-யில் 'தி லெஜன்ட்'..! சரவணன் அண்ணாச்சி போட்ட பரபரப்பு பதிவு!

First Published | Jan 1, 2023, 6:30 PM IST

'தி லெஜெண்ட்' படம் விரைவில் ஓடிடிக்கு வருகிறதா? என்கிற சந்தேகத்தை எழுப்பும் விதமாக பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
 

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர், சரவணன் அருள் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், படத்தில் கூறப்பட்டுள்ள கருத்து தற்போதைய சூழலுக்கு மிகவும் அவசியமான ஒன்று என மக்கள் கூறிவந்தாலும், விமர்சனம் ரீதியாக கிடைத்த வெற்றி, இந்த படத்தின் வசூலுக்கு கிடைக்கவில்லை என கூறலாம்.

தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நாக சைதன்யா மற்றும் வெங்கட்பிரபுவின் 'கஸ்டடி' படத்தில் இருந்து பரபரப்பான க்ளிம்ப்ஸி வீடியோ வெளியானது!

Tap to resize

போட்ட பணத்தைக் கூட லெஜெண்ட் சரவணன் எடுக்கவில்லை என  கூறப்பட்ட நிலயில், படத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை வசூல் வசூல் ஆகிவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சரவணன் அருள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தெரிவித்திருந்தார்.
 

இந்நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாகி சுமார் ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும், இவரை வைத்து படம் எடுக்கவும் தயாரிக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி.

'அர்ஜுன் ரெட்டி' பட இயக்குனர் இயக்கத்தில்... ரன்பீர் கபூர் - ராஷ்மிகா நடிக்கும் 'அனிமல்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
 

விரைவில் இவருடைய இரண்டாவது படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது தன்னுடைய முதல் படமான தி லெஜெண்ட் படம் குறித்து, சரவணன் அண்ணாச்சி போட்டு உள்ள பதிவு அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், நீங்கள் அனைவரும் காணும் வகையில் தி லெஜெண்ட் விரைவில் என பதிவிட்டுள்ளார். எனவே விரைவில் 'தி லெஜெண்ட்' திரைப்படம் ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல், வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'வாரிசு' படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு... போஸ்ட்டரை வெளியிட்டு ஏமாற்றம் கொடுத்த படக்குழு!

Latest Videos

click me!