நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் எச்.வினோத் மூன்றாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'துணிவு'. இதற்கு முன்னர் எச்.வினோத், அஜித்தை வைத்து இயக்கிய 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு படங்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்த நிலையில்... மூன்றாவதாக வெளியாக உள்ள 'துணிவு' திரைப்படமும் ஹார்டிக் வெற்றி பெறுமா? என அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.
அதேபோல் பெரிய வேன், கார், போன்றவற்றிலும் அஜித்தின் துணிவு படத்தின் போஸ்டரை ஸ்டிக்கரிங் செய்து ரசிகர்கள் புரமோட் செய்து வருகிறார்கள். நேற்றைய முன் தினம், 'துணிவு' படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த பெயர்கள் வெளியான நிலையில், நேற்று இரவு சரியாக ஏழு மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு 'துணிவு' படத்தின் டிரைலர் வெளியானது.
கடைசியாக அஜித்தின் வீரம் திரைப்படமும், விஜய்யின் ஜில்லா திரைப்படமும் கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் வெளியாகி, இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில்... சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இதே பொங்கல் திருவிழாவில் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.