Song : தகைவிலான் குருவி வாயிலாக காதலின் வலியை சொன்ன வைரமுத்து... உசுரே போகுது பாடலில் ஒளிந்திருக்கும் ரகசியம்..!

Published : Jun 12, 2026, 01:33 PM IST

Usure Pogudhey Song Secret : ராவணன் திரைப்படத்தில் இடம்பெறும் உசுரே போகுதே பாடலில் கவிஞர் வைரமுத்து ஒரு வரியில் தகைவிலான் குருவியை குறிப்பிட்டு இருப்பார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Usure Pogudhey Song Secret

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து. இசைஞானி இளையராஜா மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வைரமுத்து, குறுகிய காலம் மட்டுமே இளையராஜா உடன் பணியாற்றி இருந்தாலும், அந்த காலகட்டத்தில் அவர் இசைஞானிக்கு எழுதிய பாடல்கள் எல்லாம் காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்படுகிறது. ஒரு கட்டத்தில் இளையராஜா உடன் ஏற்பட்ட மோதலால், அவருடன் பணியாற்றியதை நிறுத்திய வைரமுத்து, அடுத்ததாக ஏ.ஆர்.ரகுமான் உடன் கூட்டணி அமைத்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தார்.

24
வைரமுத்து பாடல் ரகசியம்

ஏ.ஆர்.ரகுமான் - வைரமுத்து கூட்டணிக்கு மேலும் மெருகேற்றக்கூடிய நபர் என்றால் அது மணிரத்னம் தான். இவர்கள் மூவரும் இணைந்தால் அப்படத்தின் பாடல்கள் கன்பார்ம் ஹிட் அடித்துவிடும். ரோஜா தொடங்கி திருடா திருடா, அலைபாயுதே, ஆயுத எழுத்து, கடல், ராவணன் என இவர்கள் கூட்டணியில் வந்த அனைத்து படங்களிலும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதிலும் கடந்த 2010-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் வைரமுத்து தன்னுடைய பாடல் வரிகளால் செய்துள்ள தரமான சம்பவம் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

34
உசுரே போகுதே பாடல் பின்னணி

ராவணன் படத்தில் இடம்பெற்ற உசுரே போகுதே பாடல் வைரமுத்துவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பாடல்களில் ஒன்றாகும். இந்தப்பாடலை பாடகர் கார்த்திக் உருகி உருகி பாடி இருப்பார். மறுபுறம் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் உருகி உருகி நடித்திருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி வைரமுத்து இந்தப் பாடலை வரி வரியா செதுக்கி இருப்பாரு. இது ஒரு பொருந்தா காதலை சொல்லக்கூடிய ஒரு பாடல். இதில் அவளுடைய காதலையும் சொல்ல வேண்டும், அதே நேரத்தில் அவளுடைய ஒழுக்கமீறலையும் நியாயப்படுத்திடக்கூடாது. இந்த இரண்டையும் வைரமுத்து தன் பாடல் வரிகளால் கையாண்ட விதம், அபாரத்திலும் அபாரம்.

44
தகைவிலான் குருவி என்றால் என்ன?

இந்தப் பாடலில் தகைவிலான் குருவி என்னை தள்ளி நின்னு சிரிக்குதடி என ஒரு வரி வரும். உலகத்தில் எத்தனையோ குருவி இருந்தும், வைரமுத்து குறிப்பாக தகைவிலான் குருவியை இந்த பாடலில் பயன்படுத்தி இருப்பதற்கு ஒரு பின்னணி இருக்கு. தகைவிலான் குருவிக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அந்த வகை குருவி தரைக்கே வராமல் வானத்திலேயே பறந்துகொண்டே இருக்குமாம். அது போல என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் இருக்க, உனக்கும், எனக்கும் அவ்வளவு தொலைவு இருக்கு, காதலின் இடைவெளியை சொல்வதற்காகவே தகைவிலான் குருவியை பயன்படுத்தி இருக்கிறார் வைரமுத்து.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories