கமலின் ‘விக்ரம்’ எப்படி இருக்கு ?- படம் வெளியாகும் முன்னர் முதல் திரைவிமர்சனம் இதோ!

Kanmani P   | Asianet News
Published : Jun 01, 2022, 11:42 AM IST

கமலின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள விக்ரம் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.

PREV
15
கமலின் ‘விக்ரம்’ எப்படி இருக்கு ?- படம் வெளியாகும் முன்னர் முதல் திரைவிமர்சனம் இதோ!
vikram

'விக்ரம்' படம் வெளிவருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் கடக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள் . அனைத்து சென்டர்களிலும் அட்வான்ஸ் புக்கிங்கில் படத்திற்கான டிக்கெட்டுகளுக்கு அதிக கிராக்கி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த கமல் ரசிகர் 60 டிக்கெட்டுகளை வாங்கி புகைப்படமும் வைரலாகத்தான் செய்கிறது.

25
vikrma

ராஜ் கமல் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்திற்கு அனிருத் இசை, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, அன்பரிவ் - ஸ்டண்ட் நடனம் என ஒப்பந்தமாகியுள்ளார். இந்த குழுவில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், எஸ். காயத்ரி, சுவாதிஸ்தா, ஷிவானி, மைனா நந்தினி, வி.ஜே.மகேஸ்வரி மற்றும் சூர்யா ஆகியோர் முக்கிய சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

35
vikram

' விக்ரம் ' படத்தின் மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 120 கோடி என சொல்லப்படுகிறது.  இதில்  விளம்பரத்திற்காக 5 கோடியம், சம்பளமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - ரூ. 8 கோடி, விஜய் சேதுபதி - ரூ. 10 கோடி, ஃபஹத் பாசில் - ரூ. 4 கோடி, அனிருத் - ரூ. 4 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பளம் - ரூ. 4 கோடி, உற்பத்தி செலவு - ரூ. 40 கோடி என ஏற்கனவே வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியிருந்தது. விகாரம் வெளியவதற்கு முன்னரே கிட்டத்தட்ட ரூ. 200 கோடியை பெற்று வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

45
vikram

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் இந்தியாவில் 3-ம் தேதியும், சில வெளிநாடுகளில் ஜூன் 2ஆம் தேதியே வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரைவிமர்சனம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஓவர்சீஸ் சென்சார் விமர்சனம் எனும் பெயரில் நபர் ஒருவர் இதனை வெளியிட்டுள்ளார்.

55
vikram review

அந்த விமர்சனத்தில்  விக்ரம் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த ஆக்சன் த்ரில்லர் படங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்‌ஷன் காட்சிகள் கலக்கலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மூன்று ஸ்டார் கொடுக்கப்படுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories