RIPKK : இயற்கை மரணமடைந்த கேகே..இன்று நடைபெறும் பிரேத பரிசோதனை

Kanmani P   | Asianet News
Published : Jun 01, 2022, 11:01 AM IST

RIPKK : செவ்வாய்க்கிழமை இரவு (மே 31), அன்று  பாடகர் கே.கே தனது 53 வயதில் காலமானார். அவர் கொல்கத்தாவில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியை கலந்து கொண்ட போது அவர் நோய்வாய்ப்பட்டார்.

PREV
14
RIPKK : இயற்கை மரணமடைந்த கேகே..இன்று நடைபெறும் பிரேத பரிசோதனை
RIP KK

காதலின் இசை என 3 தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேகே. நேற்று இரவு (மே 31) கொல்கத்தாவில் நடைபெற்ற லைவ் நிகழ்ச்சியின் முடிவில் நோய்வாய்ப்பட்டு மரணித்த சம்பவம் ரசிங்கர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

24
RIP KK

பாடகர் கே.கே.வின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள கொல்கத்தா  புது மார்க்கெட் காவல்துறையினர், ஹோட்டல் அதிகாரிகளிடம் பேசி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைப் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து இன்று பாடகரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கேகேவின் குடும்பத்தினர், உறவினர்கள் கொல்கத்தா வரவழைக்கப்பட்டுள்ளனர்.

34
RIP KK

 பாடகரும் இசையமைப்பாளருமான கிருஷ்ணகுமார் குன்னத் தனது மேடைப் பெயரான கே.கே என்று அழைக்கப்படுகிறார்,  53 வயதில் காலமானார்.இருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  பிரபு தேவாவின் ஸ்ட்ராபெரி கண்ணே,  அஜித்தின் பூவுக்கெல்லாம், ஒல்லிக்குச்சி உடம்புகாரி, விஜயின் காதல் ஒரு, அப்படிப்போடு, சிம்புவின் காதல் வளர்த்தேன் என காதலுக்காக குரல் கொடுத்து டீனேஜ் இளைங்கர்களை இன்றளவும் தன வசம் வைத்துள்ளார்.

44
RIP KK

அவரது கிட்டத்தட்ட 3 தசாப்த கால வாழ்க்கையில் கே.கே இந்தியில் 500 க்கும் மேற்பட்ட பாடல்களையும், தெலுங்கு, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட பாடல்களையும் , தமிழ் கிட்ட தட்ட 60க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான இரண்டு திரை விருதுகள்- ஆண் (திரைப்படம் அல்லாத இசை) மற்றும் பல விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

click me!

Recommended Stories