மீண்டும் துவங்கும் தனுஷின் கனவுப்படம்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் நம்ம ஊர் ஹீரோ..

Kanmani P   | Asianet News
Published : Mar 29, 2022, 04:24 PM IST

தனுஷ் இயக்குனராக களமிறங்கியல்ல நான் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
18
மீண்டும் துவங்கும் தனுஷின் கனவுப்படம்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் நம்ம ஊர் ஹீரோ..
DHANUSH

துள்ளுவதோ இளமை  மூலம் ரசிகர்களை கவர்ந்த தனுஷ் இதையடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றினார். இதையடுத்து தனுஷ் தற்போது நானே வருவேன் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

28
DHANUSH

கடந்த 11 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வரும்  இருந்த இந்த கூட்டணிக்கு  ஜிவி பிரகாஷ் குமார்  இசையமைக்கிறார். இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

38
DHANUSH

முன்னதாக துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்  மாறன் உருவாகியிருந்தது.. இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியானது.

48
DHANUSH

மாறன் போதுமான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் அடுத்ததாக  திருச்சிற்றம்பலம் படம் உருவாகியுள்ளது.  இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். சான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த புதிய படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

58
DHANUSH

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு தமிழ் திரையுலகை கலக்கி வந்த தனுஷ்  கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பா.பாண்டி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

68
DHANUSH

அதோடு தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள தனுஷ்,  இயக்குனர்  வெங்கி அட்லூரியின்  இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தை கைவசம் வைத்துள்ளார்.

78
DHANUSH

முன்னதாக வெற்றிமாறனின் அசுரன் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பிஸியாக இருந்தபோது, ​​அவர் தனது அடுத்த இயக்கத்தை விரைவில் தொடங்குவார் என்று சில ஊடகங்கள் தெரிவித்தன. அதன்படி  இயக்குனர் தனுஷ் படப்பிடிப்பைத் தொடங்கினார் என்றும்  அறிக்கைகள் வெளிவந்தன. நான் ருத்ரன் என பெயரிடப்பட்டுள்ள இப்பட கதை  சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

88
DD2

தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமாக உருவாகும் என கூறப்பட்ட, இதில் நாகார்ஜுனா, அதிதி ராவ் ஹைதாரி, எஸ்.ஜே. சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் தனுஷ் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல் சொல்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories