
Thalpathy Vijay Car Collection List Details : சினிமா பின்னணியை வைத்து அறிமுகமான விஜய் இன்று தமிழ் சினிமாவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வந்த வெற்றி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இதுதான் அவர் கேமரா முன்பு தோன்றி நடித்த முதல் படம். ஆனால், இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இதே போன்று குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி என்று வரிசையாக பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். ஹீரோவாக அறிமுகமானது நாளைய தீர்ப்பு என்ற படத்தில் தான். இந்தப் படமும் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் தான்.
இந்தப் படத்தில் ஆரம்பித்து செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, சந்திரலேகா, வசந்த வாசல், மாண்புமிகு மாணவன் என்று சினிமா வாழ்க்கையை தொடங்கி கோட் படம் வரையில் 68 படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது 69ஆவது படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு வெளியாகும் 2ஆவது படம் ஜனநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை விஜய் தனக்கான அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் தளபதி விஜய் நாளை ஜூன் 22ஆம் தேதி தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பிடித்தமான வின்டேஜ், பிஎம்டபுள்யூ, மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 உள்ளிட்ட டாப் மாடல் கார்கள் உள்ளதாம். சரி அவரின் கார் கலெக்ஷன் பார்க்கலாம் வாங்க.
தளபதி விஜய் சம்பாதிக்க துவங்கிய பின்னர், அதாவது 90 க்குப்பின் விஜய் பிரியப்பட்டு வாங்கிய கார் டாடா எஸ்டேட் (Tata Estate). அப்போதே இதன் விலை ரூ.2.52 லட்சம். இந்தக் காரில் தான் தளபதி ஆரம்பத்தில் உற்சாகமாக தன்னுடைய நண்பர்களுடன் சென்னையை வலம் வந்தார். முதல் காரச்சே இருக்காதா பின்ன!!
இதைத் தொடர்ந்து, தளபதி விஜய் ஆசைப் பட்டு வாங்கிய கார்களில் பழைய மாடல் கார் பிரீமியர் 118 என்.ஈ. (Premier 118 NE). இந்த மாடல் வந்த சில வாரங்களேயே இந்த காரை வாங்கினாராம் இதன் மதிப்பு அப்போது ரூ.6 லட்சம்.
தன்னுடைய வாழ்க்கை தரம் உயர... உயர தளபதி விஜய் வாங்கிய கார்களின் ரேட்டும் அதிகாரித்து கொண்டே சென்றது. அந்த வகையில் விஜய் மிகவும் விருப்பட்டு வாங்கிய கார்களில் ஒன்று டொயோட்டா செரா (Toyota Sera) கார் 1990 களில் பிரபலமாக இருந்தது. இதன் விலை ரூ.15 லட்சம் இருக்குமாம்.
இதை தெடர்ந்து, தளபதி விஜய் வைத்திருந்த டொயோட்டா இன்னோவா கிரிஸ்டல் (Toyota Innova Crysta) கார் மிகவும் பிரபலம். இதன் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.26.05 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் வாங்கிய பின்னர், தளபதிக்கு அடிக்கடி கார் வாங்குவதே ஒரு ஹாபியாக மாறிப்போனது.
அடுத்தடுத்து சொகுசு கார்கள் பலவற்றை வாங்கி அடுக்கினார். இவர் கட்டியுள்ள வீட்டில், கார் நிறுத்துவதற்கு என்றே லிப்ட்டிங் மாடல் பார்க்கிங் இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். சரி இவர் வாங்கி வைத்திருக்கும் சொகுசு கார்கள் என்றால், பல பிரபலங்கள் வாங்க நினைக்கும் கார்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட். இந்த காரின் விலை சுமார் ரூ.8 கோடி ஆகும்.
அதே போல் சமீப காலமாக பல பிரபலங்கள் வைத்திருக்கும் ஆடி A8 L மாடல் கார். இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் போதே தளபதி போனி பண்ணி விட்டாராம். காரணம் இந்த மாடல் மீது உள்ள அட்ராக்ஷன் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.1.58 கோடி ஆகும்.
தளபதி விஜய் வாங்கி வைத்திருக்கும் மிகவும் காஸ்டிலியான கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம் (Rolls-Royce Ghost Phantom) இந்த காரின் ரூ.8.99 கோடி.
தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவும் ஒரு கார் பிரியர் தான். இவருக்கு பொதுவாக பி.எம்.டபிள்யூ வகை கார்கள் தான் பிடிக்கும் என கூறப்படுகிறது. எனவே விஜய் மனைவியின் ஆசை படி வாங்கிய எக்ஸ் 6 (BMW X6) சொகுசுக் காரின் விலை ரூ.1.04 கோடி முதல் ரூ.1.11 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
பார்ப்பதற்கே செம்ம கியூடாகவும், டிரைவ் பண்ணுவதற்கு ஸ்மூத்தாகவும் பீல் பண்ண வைக்கும் தளபதி விஜய் ஃபேவரட் கார்களில் ஒன்று தான் நிசான் எக்ஸ்-ட்ராய் (Nissan X-Trai) இந்த காரின் விலை ரூ.26 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
BMW 7-Series மனைவிக்கு பிடித்த பிராண்ட்டட் காராச்சே மனுஷன் விடுவாரா? இந்த காரை வாங்கி வைத்துள்ளது மட்டும் இன்று, சென்னையில் எங்கு ஃபேலியோடு சென்றாலும் இந்த காரை தான் எடுத்து செல்வார்.
Mercedes Benz GLA கரையும் தளபதி விட்டு வைக்கவில்லை. இந்த கார் பார்ப்பதற்கே... ஒரு பிரமாண்ட தோற்றத்தை கொடுக்க கூடியது. இதுவே தளபதியை கவர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை ரூ.89 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.