விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?..விஜய் 66 நியூ அப்டேட்..

Kanmani P   | Asianet News
Published : May 02, 2022, 03:06 PM ISTUpdated : May 02, 2022, 03:10 PM IST

விஜய் தற்போது நாயகனாக நடித்து வரும் 66 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

PREV
18
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?..விஜய் 66 நியூ அப்டேட்..
beast

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் பீஸ்ட்.லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தார் விஜய்.

28
beast

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே இவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

38
beast

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பான இந்த படத்தில் அனிரூத் இசையமைத்திருந்தார்.டார்க்  காமெடியில் உருவான இந்த படத்தில் விஜய்யின் ஆக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு..."பான் இந்தியா மூவினா என்ன? புதிய விளக்கம் தந்த விஜய் சேதுபதி...

48
beast

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான பீஸ்ட் பிரீ புக்கிங் மூலம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அனைத்தையும் தாண்டி நல்ல பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனை பெற்றுவிட்டது பீஸ்ட்.

58
Vijay 66

இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது அடுத்த படமாக விஜய் 66 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

68
Vijay 66

அரபி குத்து வெற்றியை தொடர்ந்து அதே செட்டில் இந்த படத்தின் முதல் பாடலும் படமாக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற 4 நாட்கள் படப்பிடிப்பை தொடர்ந்து தற்போது விஜய் 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...Vikram kamal Pair : மகள் வயது நடிகையுடன் ரொமான்ஸ்...! விக்ரம் படத்தில் கமலுக்கு ஜோடி யார் தெரியுமா?

78
Vijay 66

பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 20 நாள் சூட்டிங்  அங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக  ராஷ்மிகா மந்தனா  இவர்களுடன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
 

88
Vijay 66

இதற்கிடையே விஜய் 66 ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷன் கலந்த ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என அதன் இயக்குநர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலைகள் விஜய் 67 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. அதாவது தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகலாம் என தெரிகிறது.

 

Read more Photos on
click me!

Recommended Stories