இதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய்யின் அரசியல் வருகை தான். தமிழக மக்களின் நலன் கருதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இன்று மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். வரும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராகி வருகிறார். அரசியலில் களமிறங்கிய நிலையில், சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறி தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி விஜய்யின் அரசியல் வருகைக்கான படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ, கௌதம் மேனன், நரைன், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், பாபா பாஸ்கர், வரலட்சுமி சரத்குமார், ரேவதி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரோடக்சன்ஸ் நிறுவனம் ரூ.300 கோடியில் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.