வசூலில் டபுள் செஞ்சுரி அடித்த வாரிசு... அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதகளப்படுத்திய தில் ராஜு

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Thalapathy vijay's Varisu movie box office collection 210 crores in 7 days

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக ரிலீசான திரைப்படம் வாரிசு. வம்சி பைடிபல்லி இயக்கியிருந்த இப்படத்தை தில் ராஜு தயாரித்து இருந்தார். பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் விஜய்யுடன் யோகிபாபு, ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, ஷியாம், சங்கீதா, சம்யுக்தா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, விடிவி கணேஷ், சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

Thalapathy vijay's Varisu movie box office collection 210 crores in 7 days

வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் வாரிசு படத்தின் தமிழ் வெர்ஷன் ஜனவரி 11-ந் தேதியும், இதன் இந்தி வெர்ஷன் ஜனவரி 13-ந் தேதியும், இதன் தெலுங்கு வெர்ஷனான வாரசுடு ஜனவரி 14-ந் தேதியும் ரிலீஸ் ஆனது. அனைத்து மொழிகளிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... கோவிலுக்குள் செல்ல நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு... ரோட்டில் இருந்தே தரிசனம் செய்ய வற்புறுத்தியதாக புகார்


பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறை விடப்பட்டதால், கடந்த 4 நாட்களாக பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வாரிசு படத்தை பார்த்து ரசித்துள்ளனர். இதன் எதிரொலியாக படத்தின் வசூலும் குவிந்துள்ளது. இந்நிலையில், வாரிசு படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.210 கோடி வசூலித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த படங்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்த 6-வது படம் இதுவாகும்.

இதில் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். அதேபோல் தெலுங்கில் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர வாரிசு படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.5 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ரூ.100 கோடிக்கு மேலும் வெளிநாடுகளில் ரூ.63 கோடிக்கு மேலும் இப்படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஆசையை தூண்டிவிட்ட அஜித்.. துணிவுடன் பைக் ஓட்டி லைசன்ஸ் வாங்கிய மஞ்சு வாரியர்- அப்போ இனி அடிக்கடி பைக்ரைடு தான்

Latest Videos

click me!