சைலண்டா வெளியான 'ஜன நாயகன்' 3-ஆவது பாடல் லிரிக் வீடியோ! ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

Published : Dec 26, 2025, 09:14 PM IST

Jana Nayagan Chella Magale Lyrical Video : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று 3ஆவது சிங்கிள் டிராக் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

PREV
15
ஜன நாயகன் 3-ஆவது பாடல் லிரிக் வீடியோ

விஜய் நடித்துள்ள கடைசி படமான ஜன நாயகன் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு விமர்சனமும் வெளியாகி வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க ஜன நாயகன் படத்திற்கு எதிராக எழும் விமர்சனங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள முதல் 2 சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களை வைப் பண்ண செய்த நிலையில் இப்போது சைலண்டாக 3ஆவது பாடல் லிரிக் வீடியோவும் வெளியாகியுள்ளது. நாளை 27ஆம் தேதி மலேசியாவில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் இன்று சைலண்டாக 3ஆவது சிங்கிள் டிராக் வெளியாகியிருக்கிறது.

25
Jana Nayagan Movie Songs Download

அப்பா மகள் பாசத்தை பறைசாற்றும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. ஆம், விஜய் தனது மகளை கண்ணே, மணியே என்று கொஞ்சி விளையாடும் பாடல் தான் இந்த செல்லமகளே பாடல். இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள விஜய் மலேசியா புறப்பட்டுச் சென்ற நிலையில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் படம் தான் ஜன நாயகன். அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற தளபதி கச்சேரி பாடல் வெளியான நிலையில் ஒரு பேரே வரலாறு என்ற 2ஆவது சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலானது. இதில், விஜய்யின் டான்ஸூம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

35
Thalapathy VIjay 3rd Single Update Tamil

கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, பாபி தியோல், பிரியாமணி என்று ஏரளாமான பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 'ஜன நாயகன்' படத்தின் முக்கிய கரு, சித்தாந்தங்களின் மோதலைப் பற்றியது. "ஒருவர் மக்களுக்காக நிற்கிறார், மற்றொருவர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்" என்ற வரி இதை தெளிவுபடுத்துகிறது. இந்த இரு எதிரிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே மோதியுள்ளனர். அந்த பழைய மோதலின் விளைவே, நிகழ்காலத்தில் அவர்கள் மீண்டும் சந்திப்பதற்குக் காரணம். இது படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு வலுவான சஸ்பென்ஸை உருவாக்குகிறது.

45
Jana Nayagan 3rd Single Update Tamil

பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு குழந்தையின் மௌனமான பயம் பழைய மோதலை மீண்டும் கிளறுகிறது. இந்த சூழலில், ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி, அந்த குழந்தைக்கு நீதி வழங்க களமிறங்குகிறார். இதுவே கதையின் திருப்புமுனையாக அமைகிறது. தனிப்பட்ட பழிவாங்கலாகத் தொடங்கும் இந்தக் கதை, காலப்போக்கில் சமூக நீதிக்கான ஒரு பெரிய போராக மாறுகிறது. இது தனிப்பட்ட பகையை விட பெரியது என்பதை உணர்த்துகிறது. விஜய் இப்படத்தில் அரசியல்வாதி மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. 'ஜன நாயகன்' ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல, சமூகப் பொறுப்புள்ள படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
Jana Nayagan Movie Third Song Lyric Video

தெலுங்கு சினிமாவில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ படம் 9ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாக இருக்கிறது. எவ்வளவு வசூல் குவிக்கிறது என்று பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories