தளபதி விஜய் பிளாப் மூவிஸ்..! அட இத்தனை படங்களா?

First Published | Jun 22, 2023, 4:56 PM IST

தளபதி விஜய் அறிமுகமானத்தில் இருந்து, தற்போது வரை படு தோல்வி அடைந்த படங்கள் குறித்து.... இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

நாளைய தீர்ப்பு:

தளபதி விஜய்யின் அறிமுக படமே அவருக்கு தோல்வியாக தான் அமைந்தது. 1992 ஆம் ஆண்டு தந்தை SAC இயக்கத்தில் இவர் நடித்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் தோல்வி படங்களில் ஒன்று.
 

ராஜாவின் பார்வையிலே:

கடந்த 1995 ஆம் ஆண்டு, இயக்குனர் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய் நடித்த இப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

'லியோ' ஃபர்ஸ்ட் லுக் இந்த படத்தின் அட்ட காப்பியா? புகைப்பட ஆதாரத்தோடு படக்குழுவை போட்டு தாக்கும் நெட்டிசன்கள்!

Tap to resize

சந்திரலேகா:

இயக்குனர் நம்பி ராஜன் இயக்கத்தில் விஜய் - வனிதா விஜயகுமார் நடித்திருந்த இப்படம், எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும் விஜய்க்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

வசந்த வாசல்:

இயக்குனர் MR இயக்கத்தில், கடந்த 1996 ஆம் ஆண்டு ஸ்வாதி - மற்றும் விஜய் நடிப்பில் வெளியான இப்படம், பூவே உனக்காக படத்தின் ஹிட்டுக்கு பிறகு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியடைந்தது.

செல்வா:

விஜய் - ஸ்வாதி ஆகியோர்... இரண்டாவது முறையாக இணைந்து நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படமும் படு தோல்வியை சந்தித்தது.

18 வயசில் நயனையே மிஞ்சிட்டாங்களே? கழண்டு விழும் ஆடையோடு... படுக்கையறையில் கவர்ச்சி காட்டிய அனிகா! போட்டோஸ்..
 

காலமெல்லாம் காத்திருப்பேன்:

இயக்குனர் A.சுந்தர்ராஜன் இயக்கத்தில் செல்வா படத்திற்கு அடுத்து அதே ஆண்டில் வெளியான இப்படமும் விஜய்க்கு தோல்வியாகவே அமைந்து, இவரை கலங்க வைத்தது.

என்றென்றும் காதல்:

இயக்குனர் மனோஜ் கெய்ன் இயக்கத்தில், ரம்பா - விஜய் நடிப்பில், 1999 ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

நெஞ்சினிலே

தளபதி விஜய் தன்னுடைய தந்தை SAC இயக்கத்தில் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், ஈஷா கோபிகர் தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் பெரும் தோல்வியை சந்தித்தது.

நள்ளிரவில் திடுதிப்புனு காவல் நிலையத்திற்கு ஓடிய பிக்பாஸ் ரக்ஷிதா! கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார்..!
 

புதிய கீதை:

தொடர்ந்து பல ஹிட் படங்களை வரிசையாக கொடுத்து வந்த விஜய், இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் நடித்த இப்படம் தோல்வி படமாக அமைந்தது. 
 

உதயா:

இயக்குனர் அழகம் பெருமாள் இயக்கத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் விஜய் நடித்திருந்த உதயா திரைப்படத்தில், பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனாலும் படம் தோல்வியை சந்தித்தது.
 

ஆதி:

இயக்குனர் ரமணா இயக்கத்தில் விஜய் - திரிஷா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இப்படம், பல மாஸ் சீன்கள் இடம்பெற்றுள்ள தோல்வியை சந்தித்தது.

ஒரே இடத்தில் அமர்ந்து.. தினமும் 4 முதல் 5 மணி நேரம் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்! வைரலாகும் BTS புகைப்படங்கள்

சுறா:

தளபதி இயக்குனர் SP ராஜ்குமார் இயக்கத்தில் நடித்த சுறா திரைப்படம்... விஜய்யின்  திரையுலக வாழ்க்கையில் குறிப்பிட்டு கூற கூடிய தோல்வி படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

பீஸ்ட்:

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சனம் ரீதியாக தோல்வி படமாகவே கருதப்படுகிறது.

Latest Videos

click me!