ஜீவா நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வசூலில் பராசக்தி மற்றும் வா வாத்தியார் படங்களை முந்தி வசூலில் முன்னிலை வகிக்கிறது.
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன படங்களின் ரிசல்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. இந்த பொங்கல் ஜனநாயகன் பொங்கலாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இதனால் பராசக்தி சிங்கிளாக பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் பண்ணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைக்க கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
24
பராசக்தி வசூல்
சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வந்தது. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் சேத்தன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இதன் வசூல் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி ஜனவரி 17-ந் தேதி சனிக்கிழமை இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் திரையிடப்பட்ட 1514 காட்சிகள் மூலம் ரூ.4.43 கோடி வசூல் செய்திருந்தது.
34
தலைவர் தம்பி தலைமையில் வசூல்
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்து தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் லீடிங்கில் உள்ளது தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம். பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆன இப்படம் முதல் நாளில் வெறும் ரூ.1.28 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இதையடுத்து மாட்டுப் பொங்கல் அன்று ரூ.2.69 கோடி வசூல் செய்த ஜீவா படம், மூன்றாம் நாளான நேற்று அதிகபட்சமாக ரூ.4.68 கோடி வசூலை வாரிக்குவித்து பொங்கல் ரேஸில் வின்னராக மாறி இருக்கிறது. ஜீவா நாயகனாக நடித்த இப்படத்தை நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் வா வாத்தியார். கார்த்தி நாயகனாக நடித்த இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். இப்படம் இந்த பொங்கல் ரேஸில் தோல்விப்படமாக மாறி இருக்கிறது. இப்படம் நேற்று தமிழகத்தில் வெறும் ரூ.1.35 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன படங்களில் மிகவும் கம்மியான வசூலை அள்ளிய படம் வா வாத்தியார் தான். ஜப்பான் படத்திற்கு பிறகு கார்த்திக்கு மிகப்பெரிய தோல்வி படமாக வா வாத்தியார் மாறி இருக்கிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.