சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் கடந்த 12 ஆண்டுகளாக சிறு சிறு கதாபாத்திரங்களாக ஏற்று நடித்து, இன்று ஒரு நல்ல ஹீரோ என்ற பெயரை பெற்றுள்ளார் ஹரிஷ். தற்பொழுது ஐந்து திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெளியாக உள்ளது. அதில் 100 கோடி வானவில் மற்றும் டீசல் ஆகிய இரு திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்து வழங்கும் முதல் திரைப்படமான LGM (Lets Get Married) படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இந்நிலையில் நாளை இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், டிரைலர் வெளியீடும் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.