அண்மையில் அப்பாவான ராம்சரண் தனது 16வது திரைப்படத்தை நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான உப்பன்னா என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் புஜ்ஜி பாபு சனா தற்பொழுது இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
சில வினாடி புஷ்பா அல்லு அர்ஜூனாக மாறிய சிவகார்த்திகேயன்..
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு வில்லின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும், தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடிக்க மக்கள் செல்வன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் நீண்ட இடைவெளி கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் ஏ.ஆர். ரகுமான். 1992ம் ஆண்டு மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக களம் இறங்கியதில் இருந்து, சுமார் 21 ஆண்டுகளில் அவர் இசையமைக்கவிருக்கும் ஆறாவது தெலுங்கு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.